Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
Fiction
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts115/v4/1e/aa/86/1eaa8643-ecde-0334-b52f-9a8c84283c81/mza_11969847854227931838.jpg/600x600bb.jpg
The Voice Of Karuveli
Karuveli RaSa. Mahendran
23 episodes
6 days ago
Welcome to The Voice Of Karuveli presented by Karuveli RaSa. Mahendran, here i'll share Tamil Poems & Stories, Music, Experiences, Thoughts on Inner Journey, Social Challenges and Positive solutions, My Wind Industry experience, Free and Open Source Software, Global Sustainable Development Goals and Solutions, Experiences from the Social Projects, social challenges. The content will be in English as well in Tamil. With Thanks and Greetings, R. Mahendran (a) Karuveli RaSa. Mahendran https://www.sustainablelifestylehub.com
Show more...
Personal Journals
Society & Culture
RSS
All content for The Voice Of Karuveli is the property of Karuveli RaSa. Mahendran and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Welcome to The Voice Of Karuveli presented by Karuveli RaSa. Mahendran, here i'll share Tamil Poems & Stories, Music, Experiences, Thoughts on Inner Journey, Social Challenges and Positive solutions, My Wind Industry experience, Free and Open Source Software, Global Sustainable Development Goals and Solutions, Experiences from the Social Projects, social challenges. The content will be in English as well in Tamil. With Thanks and Greetings, R. Mahendran (a) Karuveli RaSa. Mahendran https://www.sustainablelifestylehub.com
Show more...
Personal Journals
Society & Culture
Episodes (20/23)
The Voice Of Karuveli
உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்வோம் Fitness Challenge Progress Update ❤️
உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்வோம் என்ற முழக்கத்துடன் துவங்கிய எனது பயண அனுபவங்களை தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன். உடலை உள்ளத்தை உறுதி செய்ய மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் இந்த அனுபவப் பகிர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அன்புடன் ரா.மகேந்திரன் (எ) கருவெளி ராச மகேந்திரன்
Show more...
1 year ago
1 hour 2 minutes 49 seconds

The Voice Of Karuveli
26 சனவரி 2020 - கிராம சபைக் கூட்டம் ஊஞ்சாம்பட்டி தேனி மாவட்டம்

26 சனவரி 2020 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தகவல்.

பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களின் பங்கேற்பை இன்னும் மேம்படுத்தவும்.

தற்சார்பு வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு மக்கள் இத்தகவலை பயன்படுத்தும் பொருட்டு மக்கள் நலன் கருதி வெளியிடப்படுகிறது.

கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

உங்கள் பகுதியிலும் இத்தகைய முயற்சிகளை எடுக்கலாமே..


இந்த தகவலை யூடியூப்பில் கேட்க விரும்புவோருக்கான முகவரி இதோ..

1 - https://youtu.be/peDinw3WfD8

2 - https://youtu.be/cu-Too5FEBs

3 - https://youtu.be/7jq1MOBUfGM

4 - https://youtu.be/c_9CkXpcp-g

5 - https://youtu.be/qcbEypblUdk

6 - https://youtu.be/s9HMJneGXmI

7 - https://youtu.be/fQ70C_CiKGM

8 - https://youtu.be/5YTRBmW7l2A

9 - https://youtu.be/LRNiWPrunbY

10- https://youtu.be/9GX2dOt61wE

11- https://youtu.be/LGUjTKH3BlI

மேலும் விபரங்களுக்கு..

கருவெளி ராச.மகேந்திரன் - 94455 28556


Show more...
5 years ago
2 hours 4 minutes 46 seconds

The Voice Of Karuveli
Beats 2 Beat Air Polution | Music Album To Support World Environment Day

This album  created to support World Environment Day.  Join me to support WED.

For more musical video check  Karuveli Musicaa  Youtube Channel, where i share new music every week.

You can use directly this link also https://www.youtube.com/channel/UCsoD7M49XzbtVrxonZxQ7MA


With Greetings,

Karuveli RaSa.Mahendran (a) R. Mahendran

Show more...
6 years ago
19 minutes 46 seconds

The Voice Of Karuveli
தமிழ் | சவாலே சமாளி | அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் இணைந்து விளையாடும் ஓர் ஆட்டம்

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் ஆகிய நாம் அனைவரும் இணைந்து விளையாடும் ஒரு ஆட்டம் தான் " தமிழ் - சவாலே சமாளி"

இப்பகுதியில் தொடர்ந்து பல முக்கியத் தகவல்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதுடன்  சவால்கள் வாயிலாக நாம் தமிழைக் கற்றுக் கொள்ளவும் போகிறோம்.

இப்பகுதிக்காக நீங்களும் பல்வேறு வகையான சவால்களை எனது எண்ணுக்கு (94455 28556) வாட்ச் அப் செய்யலாம்.

சவால்கள் வரிசை :

  1. ஒரே மூச்சில் : இந்த்ச் சவாலில் ஒரே மூச்சில் கவிதை சொல்லும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான கவிதையை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்  அல்லது நீங்களே எனது படைப்புகளில் இருந்து ஏதேனும் ஒரு கவிதையே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது.
  2. நாலு சொல்லில் : நான்கு சொற்களை மட்டும் பயன்படுத்தி கருத்து மிகு வார்த்தைக் கோர்வைகளை உருவாக்குதல். "நாலு சொல்லில்" தலைப்பில் நான் எழுதிய இரு புத்தகங்களை நீங்கள் உங்களுக்கான உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.  இது எழுதத் துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். புத்தகம் முழுவதும் காணொளியாகhttps://www.youtube.com/playlist?list=PLoZKAHV1zeil2A7K9odoSxV2RStVfeApG
  3. தமிழ்ப் புதிர்கள் : தமிழ் மொழி, வரலாறு, வாழ்வியல் மற்றும் தமிழ் சார்ந்த புதிர்கள், கேள்விகளாகப் பகிரப்பட்டு, அதற்கான தகவல்களை ஆவணம் செய்தல்
  4. வட்டார வழக்குச் சொற்கள் : தமிழகம் மட்டுமின்றி அகிலமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் பற்றி பகிர்தல், கற்றல் அவை தொடர்பான சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுதல்.

வாருங்கள் அனைவரும் இணைந்து அன்னைத் தமிழோடு விளையாடுவோம்..

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

94455 28556

Show more...
6 years ago
6 minutes 54 seconds

The Voice Of Karuveli
சிந்தனைத் துளிகள் | Daily Thoughts | Karuveli QAT

மக்களுக்காக தினசரி  எழுதி பகிரப்படும் சிந்தனைத் துளிகள் மற்றும் அதனை எழுதத் தூண்டிய அனுபவங்களை இங்கு பகிர்கிறேன்.  இது Karuveli QAT என்ற பெயரில் ஒரு செயல் திட்டமாகத் துவங்கப்பட்டுள்ளது.  இதன் முக்கிய நோக்கம் மக்களுக்கு நேர்மறையான சிந்தனைகள், செயல் வடிவங்களை உருவாக்கிக் கொள்வதற்கு தேவையான வகையில் படைப்புகளை உருவாக்கி பகிருவதே ஆகும்.  இதில் கேள்விகள், பதில்கள், சிந்தனைகள் அடங்கும்.  


Karuveli QAT:  An Open Source Project to create and spread positive vibes in the Society.  In this project i will create (write) questions, answers and thoughts which help to build positive vibes.

If you like to receive the updates via whatsapp message me Karuveli QAT to 94455 28556


With Greetings,

Karuveli RaSa. Mahendran

Show more...
6 years ago
17 minutes 12 seconds

The Voice Of Karuveli
Theni 360 : A Sustainable Development Project : Live Update தேனி 360 : தற்சார்பு மேம்பாட்டுத் திட்டம் : நேரலை

This audio recordings in Tamil and English is give you the update about Theni 360 Project, A Sustainable Development Project for Theni District. 

Feel free to Contact me for collaboration and idea sharing.


இந்த ஒலிப்பதிவுகள் அனைத்தும் தற்போது எங்கள் பகுதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தேனி 360 ( தற்சார்பு மேம்பாட்டுத் திட்டம்) திட்டம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.  உங்களது கருத்துக்கள், சிந்தனைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள எனது எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 

 

With Thanks and Greetings,

R. Mahendran (a) Karuveli RaSa.Mahendran

Independent Sustainable Development Analyst & Trainer

Writer, Author, Music Producer, Publisher

94455 28556

Show more...
6 years ago
1 hour 45 minutes 59 seconds

The Voice Of Karuveli
வியாசரின் மகாபாரதம் : கருவெளி ராச.மகேந்திரன் (கதை சொல்லி )

எனக்கு கதை மட்டும் கேட்கத் தெரிந்த நாளில் அதன் அர்த்தங்கள் முழுவதும் விளங்காத நாளில் என் வீட்டின் அருகில் இருந்த பாட்டி சொன்ன பிறகும், சில ஆண்டுகள் கழித்து அதனை இந்திய தொலைக்காட்சியில் இந்தியில் புரியாமல் வியந்து வியந்து பார்த்த பிறகும், பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் அதனை இன்னும் பல பிரமாண்டங்களை இணைந்து பிணைத்து கசக்கி உருட்டித் திரட்டி ஒளி,ஒலி பரப்பிக் கொண்டிருப்பது பற்றிக் கேட்டும்,  இன்றும் வியப்பாகவே இருக்கக் கூடிய இந்திய ஒன்றியத்தின் மாபெரும் காவியங்களில் ஒன்றான மகாபாரதம் எனக்கு எப்போதும் புதிராகவே இருப்பதற்கு மிக முக்கியமான காரணம், அதன் வாயிலாக இந்திய ஒன்றியத்திற்கு கிடைத்த பகவத் கீதையே.

ஏனெனில் அதில் சொல்லும் கருத்துக்கள் மிகவும் ஆச்சர்யம் தரக்கூடியவையாகவும் தென்பகுதியில் வாழும் மக்களுக்கும் அவர்களது வாழ்வியலிலிருந்தும் வேறுபட்டு இருப்பதாகவும் உணர்வுகள் ஏற்படுவதுண்டு. அவற்றை பொய் என்று நானே சில சமயங்களில் எனக்குச் சொல்லிக் கொள்வதுண்டு. அதனை உறுதி செய்யும் முயற்சியாகவே மூல நூல்களைத் தேடி வாசிக்கும் பணியைத் துவங்கினேன். அது உங்களுக்கும் பயன்படுமே என்று தான் இந்த ஒலிப்பதிவு. பயன்பட்டால் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள்.

தமிழகத்தில் தமிழரால் எழுதப்பட்ட திருக்குறள் எப்படி இந்த நூல்களிலிருந்து இது சொல்லும் தர்மங்களிலிருந்து தனித்து வேறுபட்டு நிற்கிறது என்பது இன்னும் தேடுதல் பணியின் வேகத்தை அதிகரிக்கத் தூண்டுகிறது.

வியாசரின் மகாபாரதம் – கதையை ஒலிப்பதிவு செய்யும் இப்பணிக்காக.. பேராசிரியர் ஜி.மணி அவர்கள் எழுதிய நூலை அடிப்படையாக பயன்படுத்தி உள்ளேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

இதில் வைக்கப்படும் கேள்விகள் எனக்கு நானே கேட்டுக் கொண்டவை. அக்கேள்விகள் உங்களுக்கும் எழலாம். அதற்கு விடை கிடைத்தால் என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்.

Show more...
6 years ago
2 hours 15 minutes 9 seconds

The Voice Of Karuveli
The Sounds Of Our World
The sounds around me (ofcourse around us) Silence 2 Noise 2 Music everything I will share here.
Show more...
6 years ago
9 minutes 38 seconds

The Voice Of Karuveli
வாசகர் விருப்பக் கவிதைகள் | கருவெளி ராச.மகேந்திரன்

இந்தப் பகுதியில் வாசகர்களின் விருப்பங்களாக வந்த தலைப்புகளுக்கு எழுதப்பட்ட கவிதைகளையும், அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களுக்கு எழுதப்பட்ட கவிதைகளையும் எனது குரலிலேயே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   அத்துடன் அக்கவிதை எழுதும் போது ஏற்பட்ட சில அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.  நிச்சயமாக இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றே நம்புகிறேன். 

உங்களுக்குப் பிடித்த தலைப்பின் கவிதைகளைப் பெற +91 - 94455 28556 என்ற எனது எண்ணிற்கு உங்களுக்கு விருப்பமான தலைப்புகளை வாட்ச் அப் செய்யுங்கள்.. 

அன்புடன் 

கருவெளி ராச.மகேந்திரன்

Show more...
6 years ago
42 minutes 24 seconds

The Voice Of Karuveli
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 இந்தியா | தமிழ் சுருக்கம்

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.  

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 குறித்த கருத்தினை மக்கள் நேரடியாக அரசுக்குத் தெரிவிக்குமாறு இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  அதற்கான தகவல்களை பின்வரும் காணொளியில் வெளியிட்டுள்ளேன்.  அதற்கு பங்களிப்பு செய்யும் விதமாக இந்த ஒலிப்பதிவினை செய்து வெளியிடுகிறேன். 

 https://youtu.be/H4uAqWwVEmo 

இந்த ஒலிப்பதிவில் 51 பக்கங்கள் கொண்ட புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 தமிழ் சுருக்கம் முழுவதுமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.  வாசிக்க நேரமில்லாத மக்கள் இதனை கேட்டு விட்டு தங்கள் கருத்துக்களை வரும் 31 ஜீலை 2019க்குள் தங்கள் கருத்துக்களை அரசுக்குத் தெரிவித்து அதன் வாயிலாக சரியான கல்விக் கொள்கை இத்தேசத்திற்கு கிட்ட வழிவகை செய்ததில் தங்களை பங்களிப்பை செய்து மகிழ்ந்திருக்க வேண்டுகிறேன்.


மேலும் தகவல்களுக்கு 94455 28556  என்ற எனது எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

அன்புடன் - கருவெளி ராச.மகேந்திரன்


 இந்தக் காணொளியை நேரடியாக பதிவிறக்கம் செய்ய

HD  Version : http://bit.ly/NationalEducationPolicy2019_01HD
Lite version  : http://bit.ly/NationalEducationPolicy2019_01Mob 

Dear All,


This audio series shares all the summary of National Education Policy Draft 2019 from Government of India for which Ministry of Human Resource Development of India seeking citizens to share their inputs and feedback on or before 31 July 2019.   This series in Tamil and shares the Tamil edition of the NEP 2019 Draft.  Below video link help you to understand where / how to give your inputs and feedback directly to MHRD of India.

https://youtu.be/H4uAqWwVEmo

You can also download this video directly from below links

HD  Version : http://bit.ly/NationalEducationPolicy2019_01HD
Lite version  : http://bit.ly/NationalEducationPolicy2019_01Mob 

For more details 94455 28556

Anbudan - Karuveli RaSa. Mahendran

Show more...
6 years ago
2 hours 10 minutes 34 seconds

The Voice Of Karuveli
புதிய நம்பிக்கைத் தொடர்

உலகெங்கும் வாழும் அனைவருக்கும்   எனது அன்பார்ந்த வணக்கங்கள்.. 

நமது சிந்தன, சொல் மற்றும் செயல்கள் நம் வாழ்வின் போக்கினை தீர்மானிக்கும் என்பதனை நாம் அனைவரும் அறிந்துணர்ந்து இருக்கிறோம் என்றே நம்புகிறேன். அதே சமயம் நம்மால் இம்மூன்றையும் நம் வாழ்வு மேம்பட்டு அமைதி தவழும் வழியில் கொண்டு செலுத்த இயலாமல் தவிப்பதையும் தினமும் கண்டு வருகிறேன்.  

  
நம் வாழ்வில் அமைதி நிறைந்திருப்பது சாத்தியமா? அதற்கு என்ன தேவை? என்பதனை இந்த புதிய நம்பிக்கை தொடர் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.   அறிமுக உரையில் அது பற்றி சிறு விளக்கங்களையும் ஒவ்வொரு ஒலிப் பதிவிலும் சில முக்கிய விபரங்களையும் பகிர்ந்து உள்ளேன்.  அவை அத்தனையும் அனைவருக்கும் அப்படியே பயன்படுமா? என்றால், என்னைப் பொறுத்தவரை அந்தத் தகவலின் அடி நாதத்தை புரிந்து கொண்டால் அகிலத்தில் வாழும் அனைவருக்கும் பயன்படும் என்றே நம்புகிறேன்!
 

அன்புடன் 

கருவெளி ராச.மகேந்திரன்   

Show more...
6 years ago
22 minutes 22 seconds

The Voice Of Karuveli
உறவும் பிரிவும் | கவிதைத் தொகுப்பு | கருவெளி ராச.மகேந்திரன
உறவும் பிரிவும் | கவிதைத் தொகுப்பு | கருவெளி ராச.மகேந்திரன் 94455 28556
Show more...
6 years ago
6 minutes 40 seconds

The Voice Of Karuveli
நம்மவர்கள் வினோதமானவர்கள் - கவிதைத் தொகுப்பு

நம்மவர்கள் வினோதமானவர்கள் - கவிதைத் தொகுப்பு, 

உங்கள் குரலில் உங்கள் கருத்துகளை பகிர 9445528556 என்ற எண்ணிற்கு வாட்ச் அப் செய்யவும் 

விரைவில் நம்மவர்கள் வினோதமானவர்கள் கவிதைத் தொகுப்பு இபுத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான முகவரி இங்கே பகிரப்படும். 

அன்புடன் , 

கருவெளி ராச.மகேந்திரன்

Show more...
6 years ago
13 minutes 14 seconds

The Voice Of Karuveli
தீ காட்டுத் தீ
This project / series initiated to create public awareness about forest fire observed in Western Ghats of Tamil Nadu, India 1. Will be used to share all the forest fire observed, reported, status 2. Useful to public to voice report forest fire incidents 3. Government officials can report the status as voice 4. Useful to create public awareness 5. To protect Western Ghats Contact 94455 28556
Show more...
6 years ago
17 minutes 11 seconds

The Voice Of Karuveli
மழை - புதிய நம்பிக்கைத் தொடர்
மழை மண் மக்கள் நம்பிக்கைகள்
Show more...
6 years ago
3 minutes 50 seconds

The Voice Of Karuveli
பயணம் - புதிய நம்பிக்கைத் தொடர்
புதிய நம்பிக்கை தொடரில் பயணம் பற்றி சில சிந்தனை துளிகள்
Show more...
6 years ago
5 minutes 4 seconds

The Voice Of Karuveli
தேடல் - புதிய நம்பிக்கைத் தொடர்
தேடல் வாழ்வின் மிக முக்கியமான ஒன்று.பல நேரங்களில் அதுவே வாழ்க்கை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த புதிய நம்பிக்கை தொடரில் அத்தேடல் பற்றி சில தகவல்களை உங்கள் உடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Show more...
6 years ago
3 minutes 11 seconds

The Voice Of Karuveli
பெண் பால் | உலகப் பெண்களின் நிலை |Pen Pal | Ulaga Pengalin Nilai - 01

பெண் பால் என்னும் இந்தத் தொடர் அனுபவபகிர்வு உலகப் பெண்களின் நிலையை எனது கண்ணோட்டத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முயற்சி.  இது சமூகப் பிரச்சனையின் பல வடிவங்களை உங்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன் அதற்கான தீர்வுகளையும் பேசும் ஒரு முக்கியமான தொடர்.   தொடர்ந்து கேட்டு உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்திட வேண்டுகிறேன்.  தங்கள் உணர்வுகளையும், கேள்விகளையும், சமூகப் பிரச்சனைகளையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட எனது சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். 


அன்புடன் - கருவெளி ராச.மகேந்திரன்


Pen Pal : In this series i'll share the life of women across the globe with my perspectives and possible solutions for the problem they face in their day to day life.  I also thank all my sisters who never hesitate to share their challenges, feelings, questions. 

With Love - Karuveli RaSa.Mahendran

I thank Anchor.fm  for creating such an easy platform to share thoughts, ideas, Music and more..

Show more...
6 years ago
19 minutes 2 seconds

The Voice Of Karuveli
நாலு சொல்லில் | குறுங்கவிதைகள் | Naalu Sollil | Innovative Way Of Expressing Thoughts In Tamil | Part 01

 “நாலு சொல்லில்” பற்றி..  
உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழியெங்கும் பரவி கிடக்கும் புதுமைகள் இன்றும் என்றும் ஆச்சர்யமளிக்கக் கூடியவைகள். நான் அறிந்தோ, அறியாமலோ “நாலு சொல்லில்” வார்த்தைக் கோர்வைகள் படைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறப்பதற்கும் அதுவே முழுமுதற் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்றால் மிகையாகாது. அதைப் போலவே, நான்கு சொற்களைக் கொண்டு வார்த்தைக் கோர்வைகளை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் நீதி கோரும் களங்களில் எனக்குள்ளே விதைக்கப்பட்டது என்பதும் உண்மையே. அய்யன் வள்ளுவனின் ஏழு சீரில் கட்டமைக்கப்பட்ட பொதுமறையாம் “திருக்குறளும்”, மூதாட்டி ஒளவையின் வாக்கும், ஜப்பானின் “ஹைக்கூ” வடிவங்களும் குறைந்த வார்த்தைகளில் பெருஞ்செய்தியை நமக்கு சொல்லும் பொக்கிஷங்களாக நான் கருதுகிறேன். அவ்வகையில் “நாலு சொல்லில்” எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதை என் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன். தமிழ்ச் சான்றோர், “நாலு சொல்லில்” தொகுப்பை எவ்வகையில் ஏற்றுக் கொள்வார்கள்? என்பதை நானறியேன். ஆனால், இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான மற்றும் பயனுள்ள ஒரு தொகுப்பாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அத்தோடு இல்லாமல், எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு எழுதுவதற்கு ஒரு ஆரம்ப வடிவமாக இது அமையும் என்று நம்புகிறேன். முகநூல் பக்கம் 4Sollil வழியாக இதனை செயல்முறைப் படுத்தியும் பார்த்தாயிற்று. பலன் சிறப்பாகவே இருக்கிறது. இந்த முயற்சியை இந்தப் புத்தக வடிவில் துவங்கி இன்னும் பல வடிவங்களாக தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் துவங்குகிறேன். உங்களின் பேராதரவுடன் இப்பயணம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன். “நாலு சொல்லி வார்த்தைக் கோர்வைகள் படைப்பதை உங்கள் வீடுகளிலும், நண்பர்களுடனும், பள்ளிகளிலும் ஒரு விளையாட்டைப் போல நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். இந்த முயற்சியை மற்ற மொழிகளிலும் செய்து பார்க்கலாம். முயற்சித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.  
About "Naalu Sollil" (Means "In Four Words")   
It is the unique idea for expressing your thoughts, feelings and things using only four words. I got seeds of inspiration and idea to write this book from the field works (for Public / Social wellness). Of course, confidence to take this idea forward is came from the Tamil Language itself, the world's oldest language which is treasury with all inspiring, motivating and eternal literature. Personally I feel, Thirkkural by Thiruvalluvar, Aathi Soodi by Avaiyaar and Haiku from Japan motivated me to take this book further. Also, I believe that anyone who like to start writing can try this version of the writing (Writing in Four Words) and it's works great. You are welcome to try and become a writer; this is tested and verified via FB page: 4Sollil. I'll try to include some of the works done by Nalu Sollil readers in part 2 of this book. You can try this like vocabulary building game with your friends, family and even you can try in your school. You are most welcome to implement this technique in other languages too. The core idea is to express your views, thoughts and feelings in only four words. I loved this challenge, so the book is with you now. Try yourself and share your experience in FB page mentioned above.  

 To Buy Kindle Version in Amazon   

முதல் பாகம் (Naalu Sollil Part 1) : https://www.amazon.in/dp/B074DZ5289/  

இரண்டாம் பாகம் (Naalu Sollil Part 2) : https://www.amazon.in/dp/B074DZYFKN/  

Listen and Download From Youtube : https://www.youtube.com/playlist?list=PLoZKAHV1zeil2A7K9odoSxV2RStVfeApG  


Show more...
6 years ago
10 minutes 6 seconds

The Voice Of Karuveli
ஓட்டு விற்பனைக்கல்ல | Vote Not For Sale | General Election 2019 India

To encourage free and fair election in Indian Union, this thought process about  possible Market value should be demanded for the vote shared. 

மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு வரவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்கினை விற்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளவும் அதனால் ஏற்படும் அவலங்களை அறிந்து செயல்படவும் உதவும் வகையில் "ஒரு ஓட்டின் சந்தை மதிப்பு என்னவாக இருக்கலாம் என்ற இத்தகவல் பகிரப்படுகிறது.


மேலும் விபரங்களுக்கு... என்னைத் தொடர்பு கொள்ளவும்..

Show more...
6 years ago
13 minutes 34 seconds

The Voice Of Karuveli
Welcome to The Voice Of Karuveli presented by Karuveli RaSa. Mahendran, here i'll share Tamil Poems & Stories, Music, Experiences, Thoughts on Inner Journey, Social Challenges and Positive solutions, My Wind Industry experience, Free and Open Source Software, Global Sustainable Development Goals and Solutions, Experiences from the Social Projects, social challenges. The content will be in English as well in Tamil. With Thanks and Greetings, R. Mahendran (a) Karuveli RaSa. Mahendran https://www.sustainablelifestylehub.com