அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் ஆகிய நாம் அனைவரும் இணைந்து விளையாடும் ஒரு ஆட்டம் தான் " தமிழ் - சவாலே சமாளி"
இப்பகுதியில் தொடர்ந்து பல முக்கியத் தகவல்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதுடன் சவால்கள் வாயிலாக நாம் தமிழைக் கற்றுக் கொள்ளவும் போகிறோம்.
இப்பகுதிக்காக நீங்களும் பல்வேறு வகையான சவால்களை எனது எண்ணுக்கு (94455 28556) வாட்ச் அப் செய்யலாம்.
சவால்கள் வரிசை :
- ஒரே மூச்சில் : இந்த்ச் சவாலில் ஒரே மூச்சில் கவிதை சொல்லும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான கவிதையை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன் அல்லது நீங்களே எனது படைப்புகளில் இருந்து ஏதேனும் ஒரு கவிதையே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது.
- நாலு சொல்லில் : நான்கு சொற்களை மட்டும் பயன்படுத்தி கருத்து மிகு வார்த்தைக் கோர்வைகளை உருவாக்குதல். "நாலு சொல்லில்" தலைப்பில் நான் எழுதிய இரு புத்தகங்களை நீங்கள் உங்களுக்கான உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இது எழுதத் துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். புத்தகம் முழுவதும் காணொளியாகhttps://www.youtube.com/playlist?list=PLoZKAHV1zeil2A7K9odoSxV2RStVfeApG
- தமிழ்ப் புதிர்கள் : தமிழ் மொழி, வரலாறு, வாழ்வியல் மற்றும் தமிழ் சார்ந்த புதிர்கள், கேள்விகளாகப் பகிரப்பட்டு, அதற்கான தகவல்களை ஆவணம் செய்தல்
- வட்டார வழக்குச் சொற்கள் : தமிழகம் மட்டுமின்றி அகிலமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் பற்றி பகிர்தல், கற்றல் அவை தொடர்பான சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுதல்.
வாருங்கள் அனைவரும் இணைந்து அன்னைத் தமிழோடு விளையாடுவோம்..
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
94455 28556