
“நாலு சொல்லில்” பற்றி..
உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழியெங்கும் பரவி கிடக்கும் புதுமைகள் இன்றும் என்றும் ஆச்சர்யமளிக்கக் கூடியவைகள். நான் அறிந்தோ, அறியாமலோ “நாலு சொல்லில்” வார்த்தைக் கோர்வைகள் படைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறப்பதற்கும் அதுவே முழுமுதற் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்றால் மிகையாகாது. அதைப் போலவே, நான்கு சொற்களைக் கொண்டு வார்த்தைக் கோர்வைகளை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் நீதி கோரும் களங்களில் எனக்குள்ளே விதைக்கப்பட்டது என்பதும் உண்மையே. அய்யன் வள்ளுவனின் ஏழு சீரில் கட்டமைக்கப்பட்ட பொதுமறையாம் “திருக்குறளும்”, மூதாட்டி ஒளவையின் வாக்கும், ஜப்பானின் “ஹைக்கூ” வடிவங்களும் குறைந்த வார்த்தைகளில் பெருஞ்செய்தியை நமக்கு சொல்லும் பொக்கிஷங்களாக நான் கருதுகிறேன். அவ்வகையில் “நாலு சொல்லில்” எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதை என் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன். தமிழ்ச் சான்றோர், “நாலு சொல்லில்” தொகுப்பை எவ்வகையில் ஏற்றுக் கொள்வார்கள்? என்பதை நானறியேன். ஆனால், இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான மற்றும் பயனுள்ள ஒரு தொகுப்பாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அத்தோடு இல்லாமல், எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு எழுதுவதற்கு ஒரு ஆரம்ப வடிவமாக இது அமையும் என்று நம்புகிறேன். முகநூல் பக்கம் 4Sollil வழியாக இதனை செயல்முறைப் படுத்தியும் பார்த்தாயிற்று. பலன் சிறப்பாகவே இருக்கிறது. இந்த முயற்சியை இந்தப் புத்தக வடிவில் துவங்கி இன்னும் பல வடிவங்களாக தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் துவங்குகிறேன். உங்களின் பேராதரவுடன் இப்பயணம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன். “நாலு சொல்லி வார்த்தைக் கோர்வைகள் படைப்பதை உங்கள் வீடுகளிலும், நண்பர்களுடனும், பள்ளிகளிலும் ஒரு விளையாட்டைப் போல நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். இந்த முயற்சியை மற்ற மொழிகளிலும் செய்து பார்க்கலாம். முயற்சித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
About "Naalu Sollil" (Means "In Four Words")
It is the unique idea for expressing your thoughts, feelings and things using only four words. I got seeds of inspiration and idea to write this book from the field works (for Public / Social wellness). Of course, confidence to take this idea forward is came from the Tamil Language itself, the world's oldest language which is treasury with all inspiring, motivating and eternal literature. Personally I feel, Thirkkural by Thiruvalluvar, Aathi Soodi by Avaiyaar and Haiku from Japan motivated me to take this book further. Also, I believe that anyone who like to start writing can try this version of the writing (Writing in Four Words) and it's works great. You are welcome to try and become a writer; this is tested and verified via FB page: 4Sollil. I'll try to include some of the works done by Nalu Sollil readers in part 2 of this book. You can try this like vocabulary building game with your friends, family and even you can try in your school. You are most welcome to implement this technique in other languages too. The core idea is to express your views, thoughts and feelings in only four words. I loved this challenge, so the book is with you now. Try yourself and share your experience in FB page mentioned above.
To Buy Kindle Version in Amazon
முதல் பாகம் (Naalu Sollil Part 1) : https://www.amazon.in/dp/B074DZ5289/
இரண்டாம் பாகம் (Naalu Sollil Part 2) : https://www.amazon.in/dp/B074DZYFKN/
Listen and Download From Youtube : https://www.youtube.com/playlist?list=PLoZKAHV1zeil2A7K9odoSxV2RStVfeApG