இது ஒரு இந்திய நாட்டுக்கதை.
கதையின் கதாநாயகன்,
ஒரு மஹா கஞ்சன்.அவன்
ஒரு தந்திரகார புத்திசாலியால்
ஏமாற்றப்பட்டு அவமானத்துக்கு
ஆளாகிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
Nathaniel Hawthorne என்ற அமெரிக்க
ஆசிரியர் எழுதிய Feathertop கதையை
தழுவி சொல்லப்பட்டது-
இந்த கதை.
ஒரு சூனியக்காரி (Witch) உதவியால்,
ஒரு Scarecrow உயிர் பெற்று,
அழகான வாலிபனாக மாறுகிறது.
தான் யார்,என்று தெரிந்தவுடன்,
அவன் தன்உயிரை விட்டூ மறுபடி
பொம்மையாக ஆகிறான்.
அப்புறம் என்ன ஆச்சு?
கதையை கேளுங்கள்.....
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
கதா சரித் சாகரம் என்ற கதை
பொக்கிஷத்தில் இருந்து
எடுக்கப்பட்ட கதை.
ஒரு நாட்டு இளவரசி ,தன்னுடைய
வரும் கால கணவன், தன் வேலைக்காரனே
என்று ஒரு ஜோசியரிடமிருந்து
தெரிந்து கொள்கிறாள்.
அது நடக்காது , நடக்க கூடாது
என்று நினக்கிறாள்.
அவளால் அவள் விதியை மாற்ற
முடிந்ததா?
கதையை கேளுங்கள்....
இது ஒரு இந்திய நாட்டின் மேகாலாயா
மாநிலத்தில் சொல்லப்படும் கதை.
இந்த மாநிலத்தில், உலகத்தில் உள்ள
மற்ற கலசாரங்கள் போல, சூரிய கிரகணத்தை
பற்றி சில நம்பிக்கைகள் இருக்கின்றன.
அவைகளை கதைகளாக சொல்லி
வருகிறார்கள்.
அது என்ன கதை?
கதையை கேளுங்கள்..
இது ஒரு தமிழ் நாட்டுக் கதை.
சங்க காலத்து கதை.
புலவர்களால் "தலை கொடுத்தான் "
குமணன் என்று பாடப்பட்ட
ஒரு சிறந்த கொடையாளி.
யார் இந்த குமணனன்?
அவர் என்ன செயதார்?
கதையை கேளுங்கள்...
இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை.
காதரீன்,ஒரு பணக்கார பிரபுவின் மகள்.
ஒரு நாள்,அவளுடைய Destiny-விதி-
அவள் முன் தோன்றி"காதரீன்,உனக்கு,
Happy Youth-மகிழ்ச்சியான இளமை காலம்-
Happy Old age-மகிழ்ச்சியான முதுமை காலம் -
உனக்கு இதில் எது வேண்டும் என்று கேட்டாள்?
காதரீன் யோசித்து,"
என்னுடைய வயதான
காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
என்றாள்.
அப்படியே ஆகட்டும் என்று
சொல்லி அவள் போய் விட்டாள்.
அப்புறம் என்ன ஆச்சு?
கதையை கேளுங்கள்....
இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை.
ஒரு புத்திசாலி பூனை -பாப்பா கேட்டோ-
நாட்டு இளவரசரூக்கு ஆலோசகரராக
இருக்கிறார்.
அவருடைய 8 பூனை குட்டிகளை
பார்த்துகொள்ள ஒரு அழகான பெண்ணை
தாதியாக அமர்த்துகிறார்.
அந்த பெண்,அவருடைய வீட்டை
சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.
பூனைகளுக்கும் நல்ல உணவு கொடுக்காமல்
இருந்தாள்
அப்புறம் என்ன ஆயிற்று?
கதையை கேளுங்கள்.....
இது ஒரு இந்திய நாட்டின் மாநிலமான மணிப்பூரில்
சொல்லப்படும் நாடோடி கதை.
கதையின் கதானாயகனுக்கு சொந்தமான்
ஒரு அபூர்வ பச்சிலையை சூரியன் திருடி
தன் இடத்திற்கு கொண்டு போகிறான்.
கதானாயகன் அதை மீட்டி கொண்டு வர
ஒரு பயணத்தை தொடர்கிறான்..
அதில் அவன் வெற்றி அடைந்தானா?
கதையை கேளுங்கள்.....
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு
முன்னால். காஷ்மீரில்,அனேக
கிராமங்கள், வெள்ளங்களினால்,
அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தன.
அந்த ஊர் அரசரால், வெள்ள
அபாயத்தை தடுக்க முடியவில்லை.
ஒரு ஏழை புத்திசாலி வாலிபன்,
தன்னால் வெள்ளங்கள் ஏற்படாமல்
செய்ய முடியும் என்று முன் வருகிறான்.
யார் இந்த வாலிபன்?
அவன் பின்னணி கதை என்ன?
அவன் வெள்ளத்தை தடுத்தானா?
கதையை கேளுங்கள்.....
இது ஒரு பைபிள் கதை.
கடவுள் மேல் அசைக்க
முடியாத நம்பிக்கை வைத்திருந்த ,
ஜோப் என்ற பக்தனின் கதை.
ஒரு சமயம்,கடவுளுக்கும்
சாத்தனுக்கும் ஒரு போட்டி.
கடவுள் சொன்னார்"
ஜோப்பை விட ஒரு சிறந்த
பக்தன் இல்லை" என்று
சாத்தனுக்கு, ஜோப்பின் மன
உறுதியை சோதிக்க சம்மதம்
தெரிவிக்கிறார்.
யார் ஜயித்தார்கள்?
கடவுளா? சாத்தானா?
கதையை கேளுங்கள்....
இது ஒரு மேற்கு இந்திய தீவுகளில்
சொல்லப்படும் ஒரு நாடோடி கதை.
உண்மையான நட்புக்கு இந்த கதை
ஒரு உதாரணம்.
தன் உயிரை பற்றி கவலைப்படாமல்.
தன் நண்பனை பல ஆபத்துகளிலிருந்து
காப்பாற்றும் ஒரு நண்பனின் கதை.
அது என்ன கதை?
கதையை கேளுங்கள்.....
இது 221ம் கதையின் தொடர்ச்சி.
ஆணவத்தினால்,பெரியோர்களை
அவமதித்த நகுஷ சக்ரவர்த்திக்கு
அகஸ்திய முனிவர்,பாம்பாக மாறுவாய்
என்று சாபம் இடுகிறார்.அவருக்கு
சாப விமோனம், அவர் யுதிஷ்டர்ரை
சந்திக்கும் போது கிடைக்கும்
என்றும் சொல்கிறார்.
நகுஷ சக்ரவர்த்தி எப்போது
தர்ம புத்திரரை சந்திக்கிறார்?
சாப விமோசனம்
கிடைத்ததா?
கதையை கேளுங்கள்...
இது ஒரு இந்திய புராண கதை.
ஆணவத்தினால் அழிந்தவர்கள்
எத்தனையோ பேர்கள்.
அப்படி அழிந்தவர்களில் ஒருவர் தான்,
நகுஷ சக்ரவர்த்தி-
மானிடரான அவருக்கு இந்திர
பதவி கிடைக்கிறது.
ஆணவத்தில் அந்த பதவியை
இழந்து வீழ்கிறார்.
யார் இந்த சக்ரவர்த்தி?
அவருக்கு எப்படி இந்திர
பதவி கிடைத்தது?
ஏன் அதை இழந்தார்?
விடைகளுக்கு
கதையை கேளுங்கள்.....
இது ஒரு மெக்சிகோ நாட்டுக் கதை
அஸ்டக் நாகரிகம்(civilization) i
பரவலாக இருந்த காலத்து கதை.
மெக்சிகோ நாட்டில் 2 எரி மலைகள்
இருக்கின்றன.
ஒன்றின் பெயர்-போபோகா தெபெடில்-
Smokey Mountain-active
2 வது-இஸ்தாசேவாடில்-
sleeping woman-dormant
இந்த 2 எரி மலைகளை பற்றி
ஒரு அழகான,சுவையான
சோகமான காதல் கதை
இருக்கிறது.
அது என்ன?
கதையை கேளுன்கள்...
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை.
இரண்டு பிறவி கூனர்கள்,தனித்தனியாக
காட்டில் வன தேவதைகளை சந்திக்கிறார்கள்.
ஒருவருக்கு கூனல் குணமாகிறது.
மற்றவருக்கு கூனல் அதிகமாகிறது.
எப்படி? எதனால்?
கதையை கேளுங்கள்...
நார்ஸ் புராணம் தொடர்கிறது...
இந்த கதை,217ம் கதையின் தொடர்ச்சி.
கொடிய அரக்கன்,தியாஸ் தீயில்
விழுந்து மரணம் அடைந்தான்
என்பதை தெரிந்து கொண்டோம்.
அவன் மரணத்தை மகிழ்ச்சியோடு
கொணடாடி கொண்டிருந்த ,
நார்ஸ் கடவுள்களுக்கு ஒரு அதிர்ச்சி.
தியாசின் மகள்,ஸ்காடி,பழி வாங்க,
ஆஸ்கார்டுக்கு வந்து கொண்டிருக்கிறாள்
என்ற செயதி-
அதன் விளைவு என்ன?
கதையை கேளுங்கள்....
இது ஒரு நார்ஸ் புராணக் கதை.
ஸ்காண்டிநேவியா நாடுகள்
என்று அழைக்கப்படும்-
நார்வே, ஸ்வீடன் என்ற நாடுகளுக்கு
ஒரு கலாசாரம் உண்டு.
அது தான்,நார்ஸ் புராணம்.
அதிலிருந்து எடுக்கப்பட்ட கதை தான்
இது.
நார்ஸ் கடவுள்களின் தலைவர்-
ஓடின்,குறும்பு கடவுள்,லோகி,
மற்றும் தேவி ஐடுன்,
என்றும் இளமை தரும்
ஆப்பிள்களுக்கு சொந்தகார கடவுள்-
இவர்களைப் பற்றிய கதை.
கதையை கேளுங்கள்..
இது ஆனந்த ராமாயணத்தில்
சொல்லப்பட்டிருக்கும் கதை.
ஶ்ரீ ராமகிருஷ்ண்மடத்தை சேர்ந்த
ஶ்ரீ கமலாத்மானந்தர் தொகுத்த
கதைகளில் ஒன்று.
தனக்கு விதிக்கப்பட்ட விதியை
ராவணன்,தன் பலத்தினால்,மாற்ற
முயற்ச்சிகிறான்,
அவன் முயற்சி வெற்றி பெற்றதா?
கதையை கேளுங்கள்....
ஐரோப்பா நாடுகளில் உள்ள சர்ச்சுகளில்.
புனிதர் கிரிஸ்டோபருடைய சிலைகள்
வைக்கப்பட்டிருக்கும். அதில்,அவர்,
குழந்தை ஏசுவானவரை தன் தோள்களில்
சுமந்து கொண்டிருப்பதாக அமைத்திருப்பார்கள்.
இந்த புனிதர் யார்?
இவர் கதை என்ன?
அவர் ஏன், குழந்தை ஏசுவை சுமக்க வேண்டும்?
விடைகளுக்கு, கதையை கேளுங்கள்.....
இது ஒரு இந்திய நாட்டு புராண கதை.
சத் சங்கம்-அறிவாளிகள்,மஹான்கள்,
நல்லவர்கள் கூட்டம்.
அவர்களுடன் தொடர்பு வைத்துக்
கொண்டால் நன்மைகள் அடையலாம்.
என்ன நன்மைகள்?
இதே கேள்வியை ஒரு சமயம்,நாரத ரிஷி
ஶ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார்.
ஶ்ரீ கிருஷ்ணர் என்ன பதில் சொன்னார்?
கதையை கேளுங்கள்...