திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன். சேகர் பாபு மூலமாக திமுகவில் இணைந்தார் என்கிறார்கள். அடுத்து வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கப்படுகிறது என்கிறார்கள். இது ஓபிஎஸ் தரப்பிற்கு ஷாக். மனோஜ் பாண்டியன் இணைந்ததற்கு பின்னணியில் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பும் காரணம் என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஓபிஎஸ்ஸின் செயல்பாடு உள்ளிட்ட சில காரணங்களும் உள்ளது. இன்னொரு பக்கம், மீண்டும் துணை பொது செயலாளர் ஆகியிருக்கும் பொன்முடி. அடுத்து அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதனும் துணை பொது செயலாளர் ஆகியுள்ளார். இதற்கு பின்னணியில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாய வாக்குகளை குறி வைக்கும் அரசியல் உள்ளது. இன்னொரு பக்கம் மனோஜ் பாண்டியன் உள்ளே வந்தது, தென் மாவட்ட திமுகவுக்குள் சில சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. அதன் பொறுப்பாளரான கனிமொழி, கவனத்தோடு கையாளத் தொடங்கி உள்ளார். இதற்கிடையே சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் கார் தாக்குதலுக்கு உள்ளானது. 'அட்டாக் செய்தது அன்புமணி டீம்' என்கிறார். என்ன நடக்கிறது?
ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. கோவை பகீர் சம்பவம். எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றன. அதே நேரத்தில் எடப்பாடி சுற்றி ஒரு ஆறு நெருக்கடிகள் உள்ளன. டிடிவி தினகரன் தரும் நெருக்கடி, தனியாக களமாடும் விஜய் என இவை எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கும் மு.க ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாகவே சென்ட்ரலுக்கு எதிராக எஸ் ஐ ஆர் விவகாரத்தை கையில் எடுத்து களமாடுகிறார். வொர்க்அவுட் ஆகுமா?
செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன். திமுக-வின் பி டீம்' என எடப்பாடி பதிலடி அட்டாக். இதில் செங்கோட்டையன் எடுத்து வைக்கும் அடுத்த நான்கு அடிகள், எடப்பாடிக்கு பலமான லாக்காக இருக்கும் என்கிறார்கள். சுதாரித்தவர், சில நகர்வுகள் மூலம் எச்சரிக்கும் எடப்பாடி என்கிறார்கள். எல்லாவற்றையும், ஹாப்பியாக வேடிக்கை பார்க்கும் மு.க ஸ்டாலின். மீண்டும், உச்சத்துக்கு சென்ற, அதிமுக-வின் 'உட்கட்சி வார்!'
கட்சிக்குள் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என சில முயற்சிகளை முன்னெடுக்கும் வி.கே சசிகலா. அந்த வகையில் எடப்பாடி டீமிடம், சசிகலாவின் தூதுவர்கள் டீல் பேசி வருகின்றனர். மூன்று டிமாண்டுகளை முன்வைக்கின்றனர். 'இதை ஏற்காவிடில், எங்களுக்கு பெரிதாக இழப்பு இல்லை ஆனால் எடப்பாடிக்கு நிறைய இழப்புகள் உண்டு முக்கியமாக தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு பறிபோகும்' என சில புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர். சசிகலாவை மட்டும் ஆதரித்து மற்றவர்களை புறக்கணிக்கலாமா? என எடப்பாடி டீம் உள்ளேயே, சிலர் ஆலோசனை தருகின்றனர். இப்போதைக்கு டிசம்பர் வரை பொறுத்து இருக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கிடையே செங்கோட்டையனை, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் எடப்பாடி.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை. இங்கு மரியாதை செலுத்தி சில வாக்குறுதிகளை கொடுத்தனர் மு.க ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள். இதற்கு பின்னணியில் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் கணக்குகள் உள்ளன. அதே நேரத்தில், இங்கே வைத்து எடப்பாடிக்கு எதிராக புதிய சபதத்தை போட்டுள்ள மூவர். ஓபிஎஸ், டிடிவி-யுடன் ஓபனாகவே கைகோர்த்த செங்கோட்டையன். திடீரென எதிர் முகாமில் இணைந்து, சபதம் போட்டதற்கு பின்னணியில், பனையூரில் இருந்து வந்திருக்கும் பாசிட்டிவ் சிக்னல் உள்ளது என்கிறார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, 30 நாட்களுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வைத்து சந்தித்தார் விஜய்.பாதிக்கப்பட்டவர்களை, அவர்களிடத்துக்கே நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை தன்னுடைய இடத்தில் அழைத்து வந்து ஆறுதல் கொடுப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே நேரத்தில், கரூர் மக்களிடம் சில வாக்குறுதிகளை விஜய் கொடுத்துள்ளார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்க மகள் கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கைகளும் வலுக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தில் செல்வப்பெருந்தகை, தொழிலாளர்கள் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பெ.சண்முகம், தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா விவகாரத்தில் தொல்.திருமாவளவன் என மு.க ஸ்டாலினிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளனர். இந்த கேள்விகள், கூட்டணிக்குள் நெருக்கடியை உருவாக்கியுள்ளதா? என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?
NDA கூட்டணியை வலுவாக்க பாஜக தீவிரம். அந்த வகையில் சமீபத்தில் அன்புமணியை சந்தித்து டீல் பேசியுள்ளனர். 'அவர் 50 தொகுதிகள் வரை கேட்க, இவர்களோ 27 தொகுதிகள் வரை ஓகே' என பேச, இப்படியாக முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதில் அன்புமணி கேட்ட ஒன்று, பாஜகவை யோசிக்க வைத்துள்ளது. பாஜக வைத்த ஒரு டிமாண்ட், அன்புமணியை யோசிக்க வைத்துள்ளது. இன்னொரு பக்கம், பாஜக வெல்லும் தொகுதிகளாக, ஆர்.எஸ்.எஸ் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது. அந்த பட்டியலை பார்த்து எடப்பாடி ஷாக். 'என் ஏரியாவையே டார்கெட் பன்றீங்களே' என கொதிக்கும் அவரின் ஆதரவாளர்கள்.
நெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டும் உதயநிதி. இதில் 'எடப்பாடி Vs உதயநிதி' என களத்தை கட்டமைக்கும் போது, அது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என கணக்கிடுகிறார் மு க ஸ்டாலின் ஆனால் அவர் கனவுக்கு குடைச்சல்கள் கொடுக்கும் வகையில், உட்கட்சியில் நிறைய பஞ்சாயத்துகள். முக்கியமாக மந்திரிகளுக்கு இடையே தீவிரமடையும் கோல்டுவார். இதை சரி செய்யாமல் ஆட்சியை தக்க வைக்க இயலாது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு, நெல் கொள்முதல் விவகாரம் என மூன்று ரூட்டில் இறங்கி ஆடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி. இதில் நெல் கொள்முதல் விவகாரத்தில், 'திமுக அரசு, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது' என விமர்சிக்கிறார் எடப்பாடி. முக்கியமாக, டெல்டா மாவட்டங்களுக்கு பயணித்து திமுக அரசை அட்டாக் செய்துள்ளார். பின்னணியில், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' எனும் அரசியல் கணக்கும் உள்ளது. அங்கு மொத்தம் 27 தொகுதிகளில், ஐந்தில் மட்டுமே அதிமுக வெற்றி. இதை மூன்று மடங்காக உயர்த்த, மூன்று வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார் எடப்பாடி. இன்னொரு பக்கம் இந்த பயணத்தின் மூலம், சசிகலா உள்ளிட்ட மூவருக்கு ஷாக் கொடுத்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் தொடர் மழை. இதில் ஆக்ஷனில் இறங்கியுள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், பீகார் அரசியல் புயல் தமிழ்நாட்டில் தாக்கம் செலுத்தும் என்கிறார்கள். அங்கு NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு முடிந்துள்ளது. ராகுல், தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு, செக் வைக்கக் கூடிய வகையில் யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களிலிருந்து வேட்பாளர்கள் தேர்வு, புதியவர்களுக்கு வாய்ப்பு என இறங்கியாடும் நிதிஷ்குமார், அமித் ஷா கூட்டணி.
இந்தப் பக்கம், இந்தியா கூட்டணியில் முழுமை அடையாத தொகுதி பங்கீடு, போட்டி வேட்பாளர்கள் களமிறக்குதல் என தேஜஸ்வி யாதவ் ராகுல் இடையே முட்டல், மோதல் தீவிரம். 'Friendly Fight' என வர்ணித்தாலும் NDA-க்கு சாதகமான சூழலை இவர்களே உருவாக்குகிறார்கள் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதற்கிடையே பிரசாந்த் கிஷோர் மூவ். பாஜக-வுக்கு ப்ளஸ் அதுவே மகா கூட்டணிக்கு ஷாக்காக மாறுகிறது என்கிறார்கள்.
பீகார் தேர்தலை உற்று நோக்கும் தமிழ்நாடு. எகிறும் பரபரப்பு.
தைலாபுரம் ரூட் எடுக்கும் திமுக. பனையூருக்கு ரூட் போடும் பாஜக. பாமகவை சுற்றி பட்டாசு. ராமதாசை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு. அன்புமணியிடம் பாஜக போட்ட டீல். இன்னொரு பக்கம், விஜயை க்ளோசாக வாட்ச் பண்ணும் அமித்ஷா. விஜய் குறித்த ரிப்போர்ட்ஸ்கள் டெல்லிக்கு பறந்துள்ளது. அதை வைத்து விஜய்க்கு உதவுங்கள் என அமித்ஷா அசைன்மென்ட். இதில் NDA கூட்டணியில் TVK சேர்ந்தால் ஸ்டாலின் சந்திக்கும் 10 பாதகங்கள். தீபாவளி அரசியல் பட்டாசு
அதிமுக 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.1972 அக் 17 -ல், எம்ஜிஆர் ஏன் இந்த கட்சியை தொடங்கினார்? திமுகவிலிருந்து ஏன் நீக்கப்பட்டார்? அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள். அவர்களை தன் ஒற்றைச் சொல்லில் கட்டுப்படுத்திய எம்ஜிஆர். இந்த பாடத்தை விஜய் படிக்க வேண்டும் என்கிறார்கள். சரி தற்போது 54 வது ஆண்டில் அதிமுக எப்படி உள்ளது? திமுகவுக்கு எதிராக அன்று எம்ஜிஆர் தர்மயுத்தம் தொடங்கினார் என்றால் இன்றோ அந்த எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, யாருக்கு சொந்தம்? என எடப்பாடி,ஓபிஎஸ், சசிகலா என ஆளாளுக்கு தர்ம யுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். ஏழெட்டு மாதங்களில் தேர்தல். தங்களை நிரூபிக்க புதிய புதிய வியூகங்களை வகுத்தபடி உள்ளன. அந்த வகையில் மூவரின் அடுத்த கட்ட ஸ்கெட்ச் என்ன? அவர்களின் சபதம் நிறைவேறுமா?
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் Vs எதிர்கட்சி தலைவர் எடப்பாடி க. பழனிசாமி இடையே காரசாரமான விவாதம். 'கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது, விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் துயரத்துக்கு காரணம்' என்கிற வகையில் விளக்கம் கொடுப்பதாக இருந்தது மு.க ஸ்டாலின் பேச்சு. 'போதிய பாதுகாப்பு தரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' என விமர்சித்தார் எடப்பாடி. கரூரில் தொடங்கி கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி என விவாதங்கள் நீண்டது.
இன்னொரு பக்கம், 'தவெக கொல்லும். நீதி வெல்லும்' என விஜயை, கடுமையாக அட்டாக் செய்துள்ளது முரசொலி.
பாஜகவோடு பிராண்ட் செய்வதன் மூலம், திமுக சிலவற்றை அறுவடை செய்ய நினைக்கின்றனர். விஜய்க்கு ஆதரவான குரலின் மூலம், எடப்பாடி சில லாபக்கணக்குகள் போடுகிறார்.
பீகார் தேர்தலில் வெற்றிபெற அமித் ஷா-நிதிஷ் டீம் Vs ராகுல்- தேஜஸ்வி டீம்க்கிடையே போட்டா போட்டி. மாறி மாறி 8 வியூகங்களை வகுத்துள்ளனர். இன்னொரு பக்கம் தலா 101 தொகுதிகளை, BJP & JD(U) பிரித்துக் கொண்டுள்ளனர். பாஜக-வின் இந்த 'Bihar Formula', எடப்பாடிக்கு பயம் காட்டுகிறதா? Vijay கூட்டணிக்கு வந்தால் வெற்றி நிச்சயம் என நம்பினாலும், இன்னொருபக்கம் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துவிடுமோ...அதனால் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், கூட்டணி ஆட்சியாக அமைந்துவிடுமோ? என்கிற அச்சமும் உள்ளது என்கிறார்கள். எனவே இதை தவிர்க்க புது வியூகங்களை வகுத்து வருகிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுகவினர்.
'கரூர் கூட்ட நெரிசல்' சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர்களை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி டீம் கண்காணிக்கும் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதை கொண்டாடி வருகிறது தவெக. அதே நேரத்தில் சட்டரீதியாக இதை எதிர்கொள்ள வியூகங்களை வகுக்கக் தொடங்கியிருக்கும் திமுக. இன்னொரு பக்கம், தவெகவை, என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது பாஜக. அதீத ஆர்வம் காட்டி வருகிறார் எடப்பாடி.
விஜய் வருகையால் மட்டுமே தன் எதிர்காலம் உறுதியாகும் என்றும் நான்கு லாபக் கணக்கு போட்டபடி உள்ளார் ஆனால் இதை உடைக்கும் வகையில் 'விஜய் கூட்டணியில் சேர்ந்தால், பாஜகவை கழட்டி விட்டுவிடுவார்' என புது குண்டை வீசும் டிடிவி தினகரன். பின்னணியில் அவருக்கு ஷாக் கொடுத்த சமாச்சாரங்களும், சமாளிக்க அவர் போடும் லாப கணக்குகளும் உள்ளன.
'மண்டல மாநாடு, 5 லட்சம் இளைஞர்களுக்கு பொறுப்பு' என வேகம் காட்டும் உதயநிதி. அவரின் டிசம்பர் பிளான், அதற்கு பின்னுள்ள அரசியல் காரணங்கள். இன்னொரு பக்கம் எடப்பாடி கையில் எடுத்திருக்கும் ஜெயலலிதா ஃபார்முலா . 2011 மாடலை, 2026 இல் கொண்டு வர திட்டம் இந்த இரண்டு பேருடைய நகர்வுகளுக்கு பின்னாலும் இருப்பது விஜயின் அரசியல். முக்கியமாக விஜயை தொடர்ந்து எதிர்பார்க்கும் எடப்பாடி. அதற்கு பின் உள்ள நான்கு பயங்கள்.
சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் விஜய் தரப்பு மனு. த.நா அரசு நோக்கி, சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், "எடப்பாடி-அண்ணாமலை-விஜய்" என மூன்று அரசியல் எதிரிகள். அவர்களை எதிர்த்து தோற்கடிக்க 'ஆபரேஷன் 39' என புதிய ஒன்றை கையில் எடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. இன்னும் கூடுதலாக சில டாஸ்குகளையும் கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். வொர்க்அவுட் ஆகுமா கோவை ஸ்கெட்ச்? இந்தப் பக்கம் விஜயை வைத்தும், கரூரை-யொட்டியும் அண்ணாமலை Vs நயினாருக்கு இடையே தொடரும் Cold War.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்தது. 'கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது' என்கிறார் எடப்பாடி. NDA கூட்டணிக்குள் TVK-வை இணைப்பதற்கான சில அசைன்மெண்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி விஜய் கூட்டணியில் இணைந்தால், எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? என்பது குறித்து PLAN B, PLAN C என ஆலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
விஜய் இணைவாரா? இன்னொரு பக்கம், 'கை நம்மை விட்டுப் போகாது' என காங்கிரஸுக்கு செக் வைப்பது போல பேசியுள்ளார் உதயநிதி. என்ன நடக்கிறது?
விஜயை வைத்து, காங்கிரஸ் போடும் கணக்கு.
அதிகாரத்தில் 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி. குஜராத் CM டு இந்திய PM. இந்த 25 ஆண்டில் மோடி சாதித்தவைகள் என்ன? சோதித்தவைகள் என்ன? அவர் ஆட்சியில் Make in India திட்டம், அந்நிய முதலீடுகள் எல்லாம் பாசிட்டிவாக பார்க்கின்றனர் பாஜக-வினர். அதேநேரத்தில் மணிப்பூருக்கு உடனடியாக செல்லாமல் காலம் தாழ்த்தியது, பணமதிப்பிழப்பு தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரை ஏராளமான நெகட்டிவ்கள் உள்ளது என்கிறார்கள் எதிர்கட்சியினர்.
அவரின் 25 ஆண்டுகால ஆட்சியால், இந்தியா வளர்ந்து வருகிறதா...இல்லை வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா?
இந்த 25 ஆண்டு பயணத்தின் விரிவான திறனாய்வு.
பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள், எடப்பாடியை அவர் வீட்டில் சந்தித்தனர். 'பலமான கூட்டணி, புதியவர்கள் சேர்க்கை' என சில மெசேஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் குறித்தும் உரையாடியதாக தகவல். 'கூட்டணிக்கு, விஜய் வர வேண்டும்' என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினுக்கு, தொடர் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது தர்மபுரி. அங்கு மாஜி மந்திரி பழனியப்பனிடமிருந்து அரூர் தொகுதியை எடுத்து, எம்.பி மணியிடம் கொடுத்துள்ளது அறிவாலயம். இதற்குப் பின்னணியில் எ.வ வேலு டீம் Vs செந்தில் பாலாஜி டீம் இடையிலான Cold war-ம் காரணம் என்கிறார்கள். நடுவே எம்.ஆர்.கே டீமும் உள்ளது. தர்மபுரி திமுக-வில், என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் மருத்துவர் ராமதாஸ் டீமை எதிர்பார்க்கிறார் மு.க ஸ்டாலின்?