
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, 30 நாட்களுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வைத்து சந்தித்தார் விஜய்.பாதிக்கப்பட்டவர்களை, அவர்களிடத்துக்கே நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை தன்னுடைய இடத்தில் அழைத்து வந்து ஆறுதல் கொடுப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே நேரத்தில், கரூர் மக்களிடம் சில வாக்குறுதிகளை விஜய் கொடுத்துள்ளார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்க மகள் கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கைகளும் வலுக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தில் செல்வப்பெருந்தகை, தொழிலாளர்கள் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் பெ.சண்முகம், தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா விவகாரத்தில் தொல்.திருமாவளவன் என மு.க ஸ்டாலினிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளனர். இந்த கேள்விகள், கூட்டணிக்குள் நெருக்கடியை உருவாக்கியுள்ளதா? என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?