சின்ன சின்ன பரிகாரங்கள்-எடுத்த முயறியில் வெற்றி பெற 12 இராசிக்காரர்களும் அவசியம் செய்ய வேண்டிய தானம்-முனைவர்.சண்முகதிருக்குமரன்
TAMIL MATHA RASI PALAN 2023 | VAIKASI | Dr.SHANMUGATHIRUKUMARAN |தமிழ் மாத ராசி பலன் | வைகாசி | முனைவர்.சண்முகதிருக்குமரன்
வைகாசி என்பதை விசாகம் என்றும்சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் சமஸ்கிருதத்தில்வைசாகம் ஆனது. இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி பத்ரங்களால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
சூரியன் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய வைகாசி மாதம் பிறக்கிறது. சூரியன் பகை ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவரின் அமைப்பு மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 12 ராசியினருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசிமாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. முருகனின் அவதார தினமாகவைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத்தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.12 இராசியினருக்கும் கிடைக்கப்போகும் பலன்களை விளக்குகிறார் முனைவர்.சண்முகதிருக்குமரன்.
மகாபாரதப்போரில் கர்ணனுக்கு தேரோட்டியாக சல்லியன் வந்தது எப்படி? முனைவர்.சண்முகதிருக்குமரன்
சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆவாள். நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் என்று முடிவாகிவிட்டது. அந்தப் பேரில் தன்னுடைய மருமகன்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு வந்துகொண்டு இருந்தான், சல்லியன்
ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்-முனைவர்.சண்முகதிருக்குமரன்
இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்.
50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்...
பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையைப் புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...!
வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும்.
இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்.
புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்.
உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்.
எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...
60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...
“இளைஞர்களோடு பழகுங்கள்.
25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...”
*அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும்அழகு தான்...*
உலகின் மிகப் பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்..!!!
பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...
வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள். திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...
திருக்குறள் வழியில் திருமூலரின் இயமமும் நியமமும் -சொறபொழிவு வழங்குபவர் நல்லாசிரியர்,டாக்டர்.சண்முகதிருக்குமரன்
ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கு நிகழ்த்தப்படும் சிறப்புகள் பற்றிய ஒலித் தொகுப்பு வழங்குபவர் நல்லாசிரியர்,டாக்டர்.சண்முகதிருக்குமரன்
ஐம்பெரும் காப்பியங்களில், முதன்மையான காப்பியம் சிலப்பதிகாரம். இது ஒரு குடிமக்கள் காப்பியம் ஆகும். வழக்கமாக காவியங்கள், ஒரு அரசனை தான் காவியத் தலைவனாக வைத்துப் போற்றும்.
நம் நாட்டில் மட்டுமல்ல கிரேக்கத்தின் பழம்பெரும் காவியமான ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி கூட அரசர்களை முதன்மையாக வைத்து பாடும்.
ஆனால் தமிழ்மொழியில் கிடைத்த இலக்கியங்கள், காப்பியங்கள் மட்டுமே அரசனின் புகழோடு மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்வியல் முறையை பற்றியும் பாடுவதை காணலாம்.
சிலப்பதிகாரம் மக்களில் ஒருவரை காவியத்தின் தலைவனாக வைத்து இயற்றப்பட்ட காப்பியமாகும்.இந்தக் காப்பியத்தில் வில்லன் யார் என்பதனை தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார் டாக்டர்.சண்முகதிருக்குமரன்
இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை?
ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி.
உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப் பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி.இது போன்ற பல்வேறு கருத்துகளைத் தாங்கிவரும் ஒலிப்பேழை..
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழுக்குப் புகழ் சேர்த்தது...செய்த சாதனைகளா? சந்தித்த சோதனைகளா? – நடுவர். டாக்டர். சண்முகதிருக்குமரன்,தலைவர். மதுரை இலக்கியப்பேரவை
செய்த சாதனைகள்
01 பத்ம பாதன் முருகன்
02. அருட் தந்தை ஞான ஆனந்தராஜ்
03 திருமதி சித்ரா தேவி
சந்தித்த சோதனைகளே
01 திருமதி வைஜெயந்தி மாலா
02 கவியரசு சரவணன்
03 கவிஞர்.பாலா
SHORT NOTE ON WORLD FAMOUS JALLIKATTU IN TAMIL
மதுரை மாநகரம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஈசான்யத்தில் அமைந்த இடம் திரு கூடல்மலை இந்த மலையை காகபுசுண்டர் மலை என்திருப்பரங்குன்றத்தில் உள்ள திருக்கூடல்மலை.கூடல் மலை , தேவரும் மூவரும் , சித்தரும் முக்தரும் கூடும் மலை.
சித்தருக்குள் சிவனாய் விளங்கும் பலரும் தாமே விரும்பி இந்த மலைக்கு வந்து நடமாடி அமர்ந்து நிலை கொண்டுள்ளார்கள். திருக்கூடல்மலையின் பெருமையை அளவிட யாரால் இயலும் ?
திருக்கூடல் மலை தங்கமலையாய்த் தெரிகிறதென்று ஞானிகள் சொல்கிறார்கள். எண்ணற்ற ரகசியங்களைக் கொண்ட மலை .இம்மலையில் வாழும் விஷஜந்துக்களும்கூட ஒருதீங்கும் செய்வதில்லை. பொதுவாக சித்தர்களின் இருப்பிடம், மலைகளாயிருக்கின்றன. ஏனெனில் அங்குள்ள மரம்செடி கொடிகள், அவர்களின் தவத்திற்கும் பிணி போக்கும் தொண்டிற்கும் துணை செய்கின்றன, ஆனால் இங்கு இம்மலையே அனைத்து பிணி அகற்றும் ஆலயமாய் விளங்குகிறது.
பலப்பல ஜென்மங்களாய் செய்த புண்ணிய பலனே ஒருவரை இம்மலைக்குக் கொண்டு சேர்க்கிறது. வந்தவர் யாவரும் தங்கள் உடல்பிணி, மனப்பிணி , வறுமை இவைநீங்குவதை சந்தேகமின்றி உணர்ந்து போற்றி மீண்டும்மீண்டும் வருகின்றனர்.
இந்தத் திருக்கூடல் மலையினை ஞானியும் சித்தருமாகிய தவத்திரு கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் தன் இருப்பிடமாகக்கொண்டு அருட்பணியாற்றினார்.
அந்த வேளையில் தான் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகமாய் விளங்கும் எல்லாம்வல்ல பரம்பொருள் நம்மிடம் கொண்ட தனிப்பெருங்கருணையின் காரணமாக தன் அலகிலாத திருவிளையாடல்களை நடத்தி
நம் பிணிகளைத் தீர்க்க தெய்வத்தின் தெய்வமாய் ஞானிக்கும் ஞானியாய் சித்தருக்கெல்லாம் சித்தராய் விளங்கும் ஈசன் அருளால் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த சோமப்பா அவர்கள் 1920களில் இக்கூடல் மலை அடிவாரத்தில் தம் திருப்பொற் பாதம் பதித்தார்.அவர் நிகழ்த்திய அற்புதங்களை விவரிக்கிறார் டாக்டர். சண்முகதிருக்குமரன் ...
கால பைரவரின் தோற்றம் வழிபாடு பைரவாஷ்டமியின் சிறப்புகள் குறித்த அற்புதமான ஆன்மிக பதிவு
பட்டிமன்றம்-கண்ணதாசன்பாடல்களில் விரவிக் கிடப்பது இலக்கியத்தாக்கமே! சமூக அக்கறையே!நடுவர்.டாக்டர்.சண்முகதிருக்குமரன். இலக்கியத்தாக்கமே ! அணியில் கவிஞர்.பத்மபாதன்மா.முருகன், திருமதி.துர்காதேவி, திருமதி.பத்மா அழகேசன் ஆகியோரும் சமூக அக்கறையே! அணியில் வழக்கறிஞர்.வே.முத்துராமலிங்கம், திருமதி. வள்ளியம்மை, கவிஞர்.பாலா பேசி உள்ளார்கள் கேட்டு மகிழுகள். பிறருக்கும் பகிருங்கள்.
மணமக்களுக்குத் திருமனம் முடிந்த உடன் பாலும் பழமும் தருவது எதற்காக? மணபெண்ணானவள், தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு, புதிய சூழலில் வாழ வருவதால், எல்லாமே புதிதாக இருக்கும்.
கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒரு பசுமாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைப்பழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ, அது போல் கணவனை சார்ந்து வம்ச விருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது. பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக, பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவார்களோ, அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம். அதை பட்டுபோக விடாமல், அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என, உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.
ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது.பிறருக்கும் பகிருங்கள்
முத்தமிழறிஞர் டாக்டர்கலைஞர் பிறந்த தின சிறப்புப் பட்டிமன்றம்-முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மொழி ஆளுமை வெளிப்பட்டது .. திரைப்பட வசனங்களிலா? படைத்த நூல்களிலா?
எவ்வளவு துன்பம் வந்தாலும் காஞ்சி மஹாபெரியவா சொன்ன இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்க-உடனடி பலன் தரும் -டாக்டர்.சண்முக திருக்குமரன் வழங்கிய உரையினைக் கேட்டு மூன்று இலட்சம் பேர் பரிகாரத்தைக் கடைப்பிடித்து பயனடைந்துள்ளார்கள் இன்னும் பலர் பயனடைந்து வருகிறார்கள் கேளுங்கள் பயனடையுங்கள் இந்த நிகழ்வைப் பிறருக்கும் பகிருங்கள்
காமராஜரிடம் இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது... காந்திய வழியையா? நேர்மையையா? எளிமையையா? தொலைநோக்குப் பார்வையா? விறுவிறுப்பான சுவையான பட்டிமன்றம்.. கேட்டு மகிழுங்கள்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பதனை விளக்கும் ஒலி
சொல்லாடல் மன்றம்- காமராஜரின் செயல்களில் பெருமைக்குப் பெருமை சேர்த்தது…
விடுதலைவீரர், கட்சித்தலைவர், சமூகப்பணி,. கல்விப்பணி, தொழிற்சாலைகள்., முதலமைச்சர் : பாகம் 2
நடுவர்: நகைச்சுவை நாவரசு. டாக்டர். சண்முகதிருக்குமரன்.
அவர் ஒரு விடுதலைவீரர் .டாக்டர். கஜேந்திர நாயகம்
அவர் ஒரு கட்சித்தலைவர், திருமதி. வைஜெயந்தி மாலா
ஆற்றிய சமூகப்பணி, - திருமதி. மகாலட்சுமி
செய்த கல்விப்பணி – திருமதி.அழகுமணி
உருவாக்கிய தொழிற்சாலைகள். – திருமதி. வள்ளியம்மை
அவர் ஒரு முதலமைச்சர் : கவிஞர். மா. முருகன் இந்தப் பகுதியில் நடுவர் + மீதம் 3 நபர்கள் திரு.மா.முருகன் அவர்களது பேச்சு வரை இடம் பெறும் கேட்டு மகிழுங்கள். பிறருக்கும் பகிருங்கள்.