
மகாபாரதப்போரில் கர்ணனுக்கு தேரோட்டியாக சல்லியன் வந்தது எப்படி? முனைவர்.சண்முகதிருக்குமரன்
சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆவாள். நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் என்று முடிவாகிவிட்டது. அந்தப் பேரில் தன்னுடைய மருமகன்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு வந்துகொண்டு இருந்தான், சல்லியன்