
ஐம்பெரும் காப்பியங்களில், முதன்மையான காப்பியம் சிலப்பதிகாரம். இது ஒரு குடிமக்கள் காப்பியம் ஆகும். வழக்கமாக காவியங்கள், ஒரு அரசனை தான் காவியத் தலைவனாக வைத்துப் போற்றும்.
நம் நாட்டில் மட்டுமல்ல கிரேக்கத்தின் பழம்பெரும் காவியமான ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி கூட அரசர்களை முதன்மையாக வைத்து பாடும்.
ஆனால் தமிழ்மொழியில் கிடைத்த இலக்கியங்கள், காப்பியங்கள் மட்டுமே அரசனின் புகழோடு மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்வியல் முறையை பற்றியும் பாடுவதை காணலாம்.
சிலப்பதிகாரம் மக்களில் ஒருவரை காவியத்தின் தலைவனாக வைத்து இயற்றப்பட்ட காப்பியமாகும்.இந்தக் காப்பியத்தில் வில்லன் யார் என்பதனை தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார் டாக்டர்.சண்முகதிருக்குமரன்