
TAMIL MATHA RASI PALAN 2023 | VAIKASI | Dr.SHANMUGATHIRUKUMARAN |தமிழ் மாத ராசி பலன் | வைகாசி | முனைவர்.சண்முகதிருக்குமரன்
வைகாசி என்பதை விசாகம் என்றும்சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் சமஸ்கிருதத்தில்வைசாகம் ஆனது. இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி பத்ரங்களால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
சூரியன் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய வைகாசி மாதம் பிறக்கிறது. சூரியன் பகை ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவரின் அமைப்பு மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 12 ராசியினருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசிமாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. முருகனின் அவதார தினமாகவைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத்தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.12 இராசியினருக்கும் கிடைக்கப்போகும் பலன்களை விளக்குகிறார் முனைவர்.சண்முகதிருக்குமரன்.