All content for utnb பெளத்திக் is the property of utnb பெளத்திக் and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
01.மங்களகரமான நாள்
02.பரம்பரை
03.அறிவாற்றல் மிக்க சிறுவன்
04.மிட்டாயா அது
05.கோட்டையைப் பிடிப்போம்
06.பிரித்தாளும் சூழ்ச்சி
07.எல்லைதாண்டு விழா
08.வந்தேமாதரம்
09.அநியாய ஆட்சியை அகற்று
10.குண்டு வெடித்தது
11.யவத்மால் வித்யாக்ருஹத்தில்
12.டாக்டராகிட உறுதி
13.வங்க பூமி
14.உணவு ஏற்பாடு
15.அஞ்சா நெஞ்சர்
16.எதிரியும் நண்பராவார்
17.தொண்டுள்ளம்
18.சிவாஜி பிறந்த மண்ணல்லவா
19.குண்டர்களுக்கு கிலி பிடித்தது
20.இளைஞனுக்கு அழகு
21.சுகங்களைத் துறந்தார்
22.நான் விரதம் பூண்டிருக்கிறேன்
23.ரகசியத் திட்டம்
24.விடம் உண்ட கண்டன்
25.வருங்காலம் பற்றிய கவலை
26.நீதி மன்றத்தில்
27.விடை பெறுதல்
28.சிறைச்சாலையில்
29.சிந்தனைப் புயல்
30.சங்கத்தை நிறுவினார்
31.முன்னுதாரணமான கட்டுப்பாடு
32.ஒண்டியாக நான் என்ன செய்ய?
33.ஓர் ஆபத்து
34.காட்டு சத்தியாக்கிரகம்
35.ஒரு கனவு
36.மகிழ்ச்சியின் வடிவம்
37.என்ன பணிவு! என்ன பணிவு!
38.எவரையும் கவரும் இயல்பு
39.அவர் தந்த ஊக்கம்
40.நம்ம டாக்டர்ஜி
41.சோதர பாசம் வளர்கிறது
42.இடைவிடாத உழைப்பு
43.குசன் குழு
44.ஒரே தியானம்
45.என் கண்கொண்டே காண்பேன்
46.சங்கப் பயிற்சி வகுப்புகள்
47.கடைசி சொற்பொழிவு
48.முடிவில்லா ஓய்வு
49.வங்காளத்துக்கு வருவேன்
50.வாரிசு
இந்த நூல்...
டாக்டர்ஜி ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியில் உறுதிபூண்டு, தனிமனிதனாகவே ஆர்.எஸ்.எஸ் ஸைத் துவக்கினார். பிற இயக்கங்களுக்கு இல்லாத விசேஷத் தன்மையுடன் சங்கம் தழைத்து வளர்ந்தது. அதுதான் மனி தர்களை உருவாக்கும் தன்மை. டாக்டர்ஜி உருவாக்கிய மாமனிதர்கள் எத்தனையோ பேர். சமுதாய நிர்மாணப் பணியில் அதே வழியில் சென்று, கணக்கற்ற தியாகங்கள் புரிந்து, எண்ணற்ற ஸ்வயம்சேவகர்களைத் தயார் செய்த வர்களில் ஒருவர் மாதவராவ்ஜி முளே.
அவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். பாரதம் பிளக்கப்பட்டு பாகிஸ்தான் ஏற்படுத்தப்பட்டபோது ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டு, வட்சக்கணக் கான ஹிந்துக்கள் அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்ட போது பஞ்சாபில் சங்கத்தை வழிநடத்திச் செல்லும் சிக்கலான பணியை அவர் சிரமேற் கொண்டார்.
அதுபோலவே, சுதந்திர பாரதம் ஒரு சர்வாதிகாரியால் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்ட காலமாகிய அவசர நிலை யின்போது, சங்கத்தில் அகில பாரத அதிகாரியாகப் பொறுப்பு வகித்த அவரது சேவை ஈடிணையற்றது.
தற்போதைய சிக்கல் நிறைந்த காலகட்டத்தில் அவரது வாழ்வும் பணியும் ஒவ்வொரு தேசபக்தரின் உள்ளத்தையும் ஊக்குவிக்கும் வல்லமை படைத்தது என்ற எண்ணத்தில் இந்நூலை வெளியிடுகிறோம். தேசபக்தர்கள் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம். - பதிப்பகத்தார்.
ௐ 1492 கொலம்பஸ் – அமெரிக்கா – செவ்விந்தியர் அழிப்பு – 400 ஆண்டுகளில் USA வளர்ச்சி – தங்களின் சக்தியை பறைசாற்ற கண்காட்சி – சர்வமத மாநாடு – மாநாட்டின் நோக்கம் – சு.வி-ன் ப்ரவேசம்
ௐ சுவாமிஜியின் சொற்பொழிவு நடக்காதிருந்தால் 1947ல் சுதந்திரம் வந்திருக்காது – பரிவ்ராஜக அனுபவம் – நாடு செத்துக் கிடந்தது – 1857-1905 - வெடிகுண்டாய் வெடிப்பேன் – வெடித்தது அமெரிக்காவில் – விடுதலை வீரர்கள் காந்தி முதல் நேதாஜி வரை ஊக்கம் பெற்றனர்.
ௐ சென்னை இளைஞர்கள் முயற்சி – அமெரிக்காவில் சிரமங்கள் – மிஸ் கேட் ஸன்பார்ன் – பேராசிரியர் ரைட் அறிமுகம்
ௐ சிகாகோ முதல் நாள் சொற்பொழிவு
ௐ Ancient order of monks – வாழையடி வாழை – தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு – பாரத பூமி பழம்பெரும் பூமி – கல் தோன்றி மண்தோன்றா – நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்தபோது அவர்கள் மரத்தின் மேல்
ௐ Mother of Religions – 4 யோகங்கள் – யதேச்சஸி ததா குரு – மும்பையில் கப்பலேறும் முன்னர் ‘எல்லாம் இதற்காகத்தான்’
ௐ Millions and Millions of Hindus – ஸ்வயமேவ ம்ருகேந்திரதா
ௐ Tolerance Vs Acceptance நதிகள் கடல் – பலபாதைகள் ஒரேகடவுள்
ௐ இஸ்ரேலிரையும், பார்ஸிகளையும் பாதுகாத்தது – மத வெறிக்கு சாவுமணி
ௐ பாரதம் திரும்புகிறார் – வரவேற்பு – ஊக்கம் அளிக்கிறார் – புயலாக மாறி
ௐ பாரம்பரிய பெருமை
(சு.வி) ராமேஷ்வர கடற்கரை மண் - அட்டாக் மண் புருஷோத்தமன் போரிட்ட இடம் –
(பா) எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி – பாருக்குள்ளே நல்ல நாடு – ரயில் நிலையத்தில் விழுந்தபோது – அன்னைக்கு பால்பாயாசம்
ௐ மதம் பண்பாடு காக்க
(சு.வி) ஏ சின்ஹா உன்னுடைய தாயை – கப்பல் மேல்தளத்தில் கிறி பிரசாரகர்களுடன்
(பா) தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?
ௐ நிகழ்கால அவலம் குறித்து
(சு.வி) அமெ. ஜான் பி லயன் வீட்டில் இரவு தூங்காமல் அழுதது
(பா) நெஞ்சு பொறுக்கு தில்லையே! – இந்த
நிலைக்கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சி சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
(சு.வி) உங்கள் ஒரு நாய்க்கு உணவில்லை என்றால்
(பா) இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)
ௐ வருங்காலம் குறித்து நம்பிக்கை
(சு.வி) “புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையிலே அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப் பகல் வெளிச்சத்தைப் போலத் தெளிவாக நான் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப் படுத்துங்கள்.” என்றார் சுவாமிஜி.
மிக நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது; கடுமையான துயரமும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது; உயிரற்றுக் கிடந்த உடல், உயிர் பெற்று எழுகிறது
ஒரு நீண்ட துயிலிலிருந்து நம் பாரத அன்னை விழித்தெழுந்து கொண்டிருக்கிறாள். இதைக் குருடர்களும், குதர்க்கவாதிகளும் பார்க்கமாட்டார்கள். அவளை யாராலும் தடுக்க முடியாது. இனி அவள் உறங்கப் போவதில்லை. எந்த அன்னிய சக்தியாலும் அவளை நிறுத்த முடியாது. அவளது காலடியில் அபாரமான சக்தி எழுந்து கொண்டிருக்கிறது.
(பா) அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.
ஆடுவோமே ! பள்ளு பாடுவோமே !
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று
ஆடுவோமே!
நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் -- இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் -- இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் -- பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.
ௐ வலிமையைப் போற்றுவோம்
(சு.வி) இரும்பையொத்த தசைகளும் எஃகையொத்த நரம்புகளும் – தீப்பிழம்பு போன்ற இளைஞர்கள் – கால்பந்து விளையாடு
(பா) வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
வாழ்வின் லட்சியம்
(சு.வி) பிறருக்காக வாழ்பவர்களே வாழ்பவர்கள்
(பா) தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை..
“ஆர்.எஸ்.எஸ்
குறிக்கோள் செயல்முறைகள்“
-பரம பூஜனீய ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ்
இந்த நூல்...
குருஷேத்திரம் மகாபாரதப் போர் நடந்த இடம். போர் தொடங்குவதற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசம் செய்த இடம். இந்தப் புண்ணியத் ஸ்தலத்தில் 1965-ம் ஆண்டு சங்க காரியகர்த்தர்களின் மத்தியில் அப்போது சங்கத்தின் சர்கார்யவாஹ் பொறுப்பில் இருந்து வழிகாட்டி வந்த பரமபூஜனீய பாளாசாகேப் தேவரஸ் அவர் ஆற்றிய ஆறு சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த தூல்.
சங்கத்தின் இலட்சியத்தின் இறுதி வடிவம்தான் என்ன? எதைச் செய்தால் அந்த இலட்சியம் நிறைவேறும்? இது போன்ற கேள்விகள் இயல்பாகவே சங்க காரிய கர்த்தர்களின் மனதில் எழுகின்றன.
மேலும் இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், பலவிதமான இடர்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரலாம். அவற்றால் மனம் வேதனைப்படுகிறது. இது இயற்கையானதே. இது போன்ற நேரத்தில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
இத்தகைய எண்ணங்கள் மனதைக் குழுப்பமடையச் செய்கின்றன. மனம் சோர்வடைகிறது. வேலையில் ஊக்கம் குறைகிறது. போர்க்களத்தில் மனம் மயங்கிய பார்த்தனைப் போல் பளிக்களத்தில் சிந்தை கலங்கி, திகைத்து போய் நின்று விடுகிறார்கள்.
பார்த்தனுக்கு கிருஷ்ணன் கீதை மூலம் வழிகாட்டியது போல. பரமபூஜனிய பாளாசாகேப் தேவரஸ் அவர்கள் இந்த நூலில் காரியகர்த்தர்களுக்கு வழிகாட்டுகிறார். அந்த வகையில் இந்த பேருரை குருக்ஷேத்திரத்தில் நிகழ்த்தப்பட்டது மிகவும் பொருத்தமானதே.
அப்போது அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றைய சூழ்நிலையிலும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. சங்க காரியகர்த்தர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
-பதிப்பகத்தார்.