நாம் மற்றவர்களுக்காக அன்றாடம் செய்யும் சில செயல்கள், மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள நினைக்கும் முனைப்பு இவையெல்லாம் நமக்கு எந்தவிதமான மன உளைச்சலை தருகிறது என்பதை உணர்ந்தும் உணராதது போல் கடந்து செல்கிறோம். அப்படிப்பட்ட ஒரு மனிதர் தன் அனுபவங்களை, தன் மனக்குமுறல்களை அவர் நண்பரிடம் பகிரும்பொழுது, நாமும் நம் மனக்குமுறலுக்கான வார்த்தைகளை அதில் அறிந்து கொள்கிறோம்.
உளவியல் ரீதியாக பல்வேறு விசயங்களை, ஆழ சிந்தித்து, அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குறது, எந்தவிதத்தில் நம் உணர்வுகளை அது ஆட்கொள்கிறது போன்ற பல விசயங்கள் இந்த சிறுகதையில் இடம் பெற்றிருந்தது. இந்த சிறுகதை குறித்து என்னுடைய புரிதல்கள் மற்றும் அனுபவங்கள் தான் இந்த Podcast.
இந்த சிறுகதையை நீங்கள் படிக்க விரும்பினால் இதை க்ளிக் செய்யவும் : ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்-ஆதவன் – Abiman
அறம் புத்தகத்தோட டேக் லைனே, மனதைக் கழுவும் உண்மை மனிதர்களின் கதைகள்... நிஜமாவே அதுல இருக்குற ஒவ்வொரு கதையும் மனதை கழுவிப் போட்ற கதைகள்தான்... யானை டாக்டர், வணங்கான், நூறு நாற்காலிகள்னு அதனுடைய பட்டியல் பெருசா போகும்...
துவக்கத்துல வட்டியும் முதலும் புத்தகத்துல, பசி பற்றி வந்த சில வரிகள மேற்கோளா சொல்லி இருப்பேன்... பசியின் கொடூரத்த எளிமையான வார்த்தைகள்ள விளக்குற வரிகள் அது... சோற்றுக்கணக்கு கதையும் பசியை அடித்தளமா வச்சுதா மனித அறத்தை பேசுது... நான் முழு கதையும் சொல்ல போறது இல்ல... அது பத்தின அறிமுகம் மட்டும்தா... வாசிப்பனுபவம் நா உங்ககிட்ட கதையா சொல்றத காட்டிலும் பேரனுபவமா இருக்கும் கண்டிப்பா அந்த சிறுகதைய படிங்க...
இன்னும் நிறைய வீடியோக்கள், கட்டுரைகள பார்க்க இந்த தளத்தை பாருங்க : https://abiman.in/
மற்ற மொழி படங்கள கொண்டாடுற ஒரு சிலர் உலக சினிமா அப்டினா இப்டிதா இருக்கனும், இப்டி இருந்தா மட்டும்தா உலக சினிமானு சில வரையறைகள் வைக்குறாங்க... அதெல்லாம் சரிதானா? அப்டி இருக்குற படங்கள் மட்டும் தான் உலக படங்களா? நடுவுல இந்த ஆர்ட் படங்கள பார்க்குறவங்க பண்ற அலப்பறைகள் என்ன? இதையெல்லாம் நா எப்டி புரிஞ்சுக்குற, இத பத்திதான் இந்த பாட்காஸ்ட்.. ஃபுல்லா கேளுங்க... (என்ன பத்தி இன்னும் தெரிஞ்சுக்க youtube-ல abimantube (AbimanTube - YouTube) check பண்ணி பாருங்க... நிறைய வீடியோஸ் சினிமா சார்ந்து இருக்கும்... நன்றி...
Instagram: AbimanTube (https://instagram.com/abimantube )
பலருக்கும் தெரியாத, நடிகர் பிரகாஷ் ராஜ் எழுதுன ”சொல்லாததும் உண்மை” புத்தகத்த பத்திதான் இந்த பாட்காஸ்ட். சொல்லாதததும் உண்மை, விகடன்ல தொடரா வெளிவந்துட்டு இருந்துச்சு, அத தொகுத்து புத்தகமா வெளியிட்டாங்க. இந்த புக் மூலமா என்ன மாதிரியான புரிதல்கள் வந்துச்சு, எந்த மாதிரியான மாறுதல்கள் என் வாழ்க்கையில நடந்துச்சு, இந்த மாதிரியான விசயங்கள பேசியிருக்க... இது மட்டுமில்லாம, காதல் சார்ந்தும், கடவுள் சார்ந்தும், காமம் சார்ந்தும் என்னுடைய புரிதல்கள் என்னவா மாற்றமடைஞ்சுதுனும் பேசியிருக்கேன்... முழுவதும் கேட்டுட்டு உங்க கருத்துகள சொல்லுங்க... என்ன பத்தி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்க என்னுடைய youtube channel பாருங்க - abimantube (AbimanTube - YouTube )
Instagram: AbimanTube (https://instagram.com/abimantube )