
அறம் புத்தகத்தோட டேக் லைனே, மனதைக் கழுவும் உண்மை மனிதர்களின் கதைகள்... நிஜமாவே அதுல இருக்குற ஒவ்வொரு கதையும் மனதை கழுவிப் போட்ற கதைகள்தான்... யானை டாக்டர், வணங்கான், நூறு நாற்காலிகள்னு அதனுடைய பட்டியல் பெருசா போகும்...
துவக்கத்துல வட்டியும் முதலும் புத்தகத்துல, பசி பற்றி வந்த சில வரிகள மேற்கோளா சொல்லி இருப்பேன்... பசியின் கொடூரத்த எளிமையான வார்த்தைகள்ள விளக்குற வரிகள் அது... சோற்றுக்கணக்கு கதையும் பசியை அடித்தளமா வச்சுதா மனித அறத்தை பேசுது... நான் முழு கதையும் சொல்ல போறது இல்ல... அது பத்தின அறிமுகம் மட்டும்தா... வாசிப்பனுபவம் நா உங்ககிட்ட கதையா சொல்றத காட்டிலும் பேரனுபவமா இருக்கும் கண்டிப்பா அந்த சிறுகதைய படிங்க...
இன்னும் நிறைய வீடியோக்கள், கட்டுரைகள பார்க்க இந்த தளத்தை பாருங்க : https://abiman.in/