
நாம் மற்றவர்களுக்காக அன்றாடம் செய்யும் சில செயல்கள், மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள நினைக்கும் முனைப்பு இவையெல்லாம் நமக்கு எந்தவிதமான மன உளைச்சலை தருகிறது என்பதை உணர்ந்தும் உணராதது போல் கடந்து செல்கிறோம். அப்படிப்பட்ட ஒரு மனிதர் தன் அனுபவங்களை, தன் மனக்குமுறல்களை அவர் நண்பரிடம் பகிரும்பொழுது, நாமும் நம் மனக்குமுறலுக்கான வார்த்தைகளை அதில் அறிந்து கொள்கிறோம்.
உளவியல் ரீதியாக பல்வேறு விசயங்களை, ஆழ சிந்தித்து, அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குறது, எந்தவிதத்தில் நம் உணர்வுகளை அது ஆட்கொள்கிறது போன்ற பல விசயங்கள் இந்த சிறுகதையில் இடம் பெற்றிருந்தது. இந்த சிறுகதை குறித்து என்னுடைய புரிதல்கள் மற்றும் அனுபவங்கள் தான் இந்த Podcast.
இந்த சிறுகதையை நீங்கள் படிக்க விரும்பினால் இதை க்ளிக் செய்யவும் : ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்-ஆதவன் – Abiman