திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --388
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
1காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே .
1 காய்கதிர்ச்
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --387
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --386
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --385
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
385 மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --384
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
384 தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --383
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --382
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --381
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
ஆதியோ டந்தம் இலாத 1பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1
1 பராபரன்
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --380
இரண்டாம் தந்திரம்
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
380 ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --379
இரண்டாம் தந்திரம்
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --378
இரண்டாம் தந்திரம்
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்
டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --377
இரண்டாம் தந்திரம்
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
377 தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்1கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மைய தாமே
1கடலூழித்
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --376
இரண்டாம் தந்திரம்
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
376 சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
பாடல்-375
அடிமுடி தேடல்
.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
பாடல்-374
அடிமுடி தேடல்
.ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்-8
பாடல்- 373
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந்
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
1நானே அறிந்தேன் அவனாண்மை யாலே.
1 நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே
திருமூலர் அருளிய திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
பாடல்- 371
எலும்பும் கபாலமும்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்-8
பாடல்- 372
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
பாடல் -370
தலைப்பு - சக்கரப் பேறு
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.
திருமூலர் அருளிய திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
பாடல் -369
தலைப்பு - சக்கரப் பேறு
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து 1தரித்தனன் கோலமே 3
1 கொடுத்தனன்