நம் வாழ்க்கையில் மிக முக்கியமான உந்து கோலாக இருக்கும் ஓர் உணர்வு தேடல் மனித சமூகத்தின் மிக முக்கியமான நிகழ்வுகள், தேடல் என்னும் உணர்வால் தான் நிகழ்ந்துள்ளது.
இந்தத் தேடல் வெளியுலகத்தை நோக்கி இல்லாமல் நமக்குலான தேடலாக கூட இருக்கலாம், இது நம் வாழ்க்கையில் மிக முக்கியமான தேடல்களில் ஒன்று. கட-வுள் என்ற சொல்லுக்கு ஒரு பொருத்தமான விளக்கமாக “நமக்குள்ளான தேடலே” இருக்க முடியும்.
நாம் நம்மை அறிந்து கொள்ளும் முயற்சியில் முதலில் துவங்க வேண்டியது நம் பலத்தை அறிந்து கொள்வதுதான். நம் சிறுவயதில் இருந்தே இந்த சமூகம் பலவீனத்தை அறிந்து அதை சரி செய்ய நம் ஆற்றலை பயன்படுத்த கற்றுக் கொடுத்ததோ தவிர பலத்தை அறிய இல்லை. ஆனால் நாம் எப்பொழுது நம் பலத்தை நோக்கி நம் ஆற்றலை செலுத்துகிறோமோ அதுவே நமக்கு ஒரு வெற்றிப் படிக்கட்டாக மாறுகிறது. இந்த மனநிலை மாற்றமே நமக்கு உள்ளன தேடலின் மிக பெரிய திருப்புமுனையாக நான் எண்ணுகிறேன்.
நாம் ஒவ்வொருவரும் பல பண்புகள் கொண்டவர்கள். இந்த பண்புகளே நம் பலத்தை தீர்மானிக்கின்றன. நாம் முக்கியமாகக் புரிந்து கொள்ளவேண்டியது இதில் எந்த பண்பும் தீயது அல்ல. இதுவே நம்மை ஒரு தனிப்பட்ட மனிதனாக அடையாளப்படுத்துகிறது.
நாம் எப்போது தன்னிலை அறிந்து செயல்படுகிறோமோ, அது நம் இயல்புடன் இருப்பதால், அது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாறுகிறது .
உங்களுக்குள்ளான தேடல் தொடரட்டும்