இணையத்தில் நீங்கள் சாதாரணமாகச் செல்லும் பக்கங்களைத் தாண்டி இலகுவில் அணுக முடியாத மூலைகளில் ஒளிந்திருக்கும் இருண்ட வலை என்றால் என்ன? இதன் தொழில்நுட்ட பின்புலம் எவ்வாறானது? இது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு மட்டுமானதா? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.
இந்தத் தலைப்புத் தொடர்மான மேலதிக குறிப்புக்கள்:
#oliyodai #tamil #podcast #cryptocurrency #fintech #tamilpodcast #tamiltech
பரவலாக்கிய நிதி என்று சொல்லக்கூடிய decentralized finance (DeFi) என்பது எவ்வாறான ஒரு புதிய பொருளாதார சூழலை நோக்கிய நகர்வைக் காட்டுகிறது, மையப்படுத்தப்பட்ட பொருளாதார சூழலில் இருந்தான இந்த மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அவற்றின் நன்மை தீமைகளும் என்ன, என்பதைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.
இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:
மத்திய வங்கிகளின் பங்கு மாறிவரும் இன்றைய பொருளாதார சூழலில் மத்திய வங்கி எண்ம நாணயம் எனப்படும் Central Bank Digital Currency (CBDC) எவ்வாறான மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் என்பதைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.
இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:
சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்படும் பிட்கோயின் அல்லது கிறிப்டோ கரன்சி அல்லது மறையீட்டு நாணயம் என்றால் என்ன? எவ்வாறான தொழில்நுட்ப பின்புலத்தில் இது உருவானது? இதன் இன்றைய பயன்பாட்டு நிலை எவ்வாறானது? இவற்றில் முதலீடு செய்வது ஆபத்தானதா? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.
இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:
குதிரைப் பந்தையத்தைப் போன்ற ஒரு சூதாட்டம் என்றில்லாமல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி? பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகள் என்ன? அதிலுள்ள ஆபத்துக்கள் என்ன? அவதானமாக இருக்கவேண்டிய விடையங்கள் என்ன? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.
இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:
நீங்கள் வேலை செய்து உழைக்கும் பணத்தை வருங்காலத்தில் பயன்படும் வகையில் எடுத்து வைப்பது சேமிப்பு என்றால், அந்தப் பணத்தை தொடந்து எமக்குப் பயன்தரும் வகையில் வேலை செய்ய வைப்பதை முதலீடு எனலாம். அவ்வாறாக முதலீடு செய்வது எப்படி? எங்கு ஆரம்பிப்பது? எதில் முதலீடு செய்வது? போன்ற விடயங்களைப் பற்றி இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.
இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:
உங்கள் கணினியிலுள்ள தகவல்களின் பாவனையைத் தடுத்து அவற்றைப் பணயமாக வைத்து உங்களிடமிருந்து பணம் பெற முயற்சிக்கும் ரான்சம்வேர் அல்லது பணயத் தீநிரல் என்றால் என்னவென்று இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.
இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்:
இணையப் பயன்பாட்டில் உங்களை ஏமாற்றி உங்கள் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டை விவரங்கள் போன்றவற்றைத் தந்திரமாகத் திருடும் மின்-தூண்டிலிடல் அல்லது ஃபிஷிங் தாக்குதல் என்றால் என்னவென்று இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம்.
இந்தத் தலைப்புத் தொடர்பான மேலதிக குறிப்புக்கள்: