காலித் ஹொசெயினி எழுதிய ‘The Kite Runner’ நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம். ஆப்கானைச் சேர்ந்த அமீரின் சிறுவயது காபுல் வாழ்வும் அங்கு அவன் நண்பன் ஹசனுக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்த பாதிப்பும் வாழ்வு முழுதும் அது எப்படி அவனைத் துரத்துகிறது என்பதைப் பேசும் நாவல் இது. அதற்கான பரிகாரத்தைச் செய்வதற்கான சந்தர்ப்பம அமீருக்கு எப்படிப் பின்னாளில் ஏற்படுகிறது, அதற்குப்பின்னர் என்ன என்பதுதான் இந்நாவல். அமீரின் வாழ்க்கையுனூடாக நாவல் ஆப்கான் வாழ்வின் சில பகுதிகளையும் புலம்பெயர் வாழ்வின் பண்புகளையும் பேசுகிறது.
ஜூம்பா லாஹிரியை வாசித்தல் என்பது தனி அனுபவம். பேரமைதியும் பெரும் பிரளயமும் நிறைந்து கிடக்கும் மனிதர்களைப் பாத்திரமாக்குபவர் லாஹிரி. அவருடைய Unaccustomed Earth தொகுப்பிலிருக்கும் "Once in a lifelite" கதையைப்பற்றிய பார்வை இது.