Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
Health & Fitness
Sports
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts115/v4/5d/1e/f2/5d1ef2f9-6432-3d9a-5307-f071ed6790a6/mza_2599946313210355683.jpg/600x600bb.jpg
South India Tamil Nadu Spirituality & goodness pod
Adithya Raghavan
9 episodes
1 day ago
I hope to record snippets that I find interesting about this great saint whom I had a luck of seeing once in my life, when I was a child. My podcasts are in Tamil which I believe is a language older than Sanskrit. And following the path just like Sanskrit, it’s now a dyeing language. #தமிழ் Contact adatsupport@gmail.com Please listen if you find Tamil hard read and hope you enjoy the content!
Show more...
Self-Improvement
Education
RSS
All content for South India Tamil Nadu Spirituality & goodness pod is the property of Adithya Raghavan and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
I hope to record snippets that I find interesting about this great saint whom I had a luck of seeing once in my life, when I was a child. My podcasts are in Tamil which I believe is a language older than Sanskrit. And following the path just like Sanskrit, it’s now a dyeing language. #தமிழ் Contact adatsupport@gmail.com Please listen if you find Tamil hard read and hope you enjoy the content!
Show more...
Self-Improvement
Education
Episodes (9/9)
South India Tamil Nadu Spirituality & goodness pod
About Madurai Meenakshi Temple

On the list of top 30 nominees for the "New Seven Wonders of the World", the temple you see today was rebuilt in the 16th century by Vishwanatha  Nayakar who was a Nayak ruler after it was destroyed and looted by  Muslim raider Malik Kafur in the 14th century. It is believed that the  original structure of the Meenakshi Temple dates back to the 6th century  BC. There are an estimated 33,000 sculptures in the temple.

Show more...
4 years ago
5 minutes 24 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
How does a Stone become God.
"பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்* கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம். சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம். 48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம். இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும். இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது. சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும். அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும். 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார். தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப் பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள். இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்
Show more...
4 years ago
8 minutes 4 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
He lived 4700 years. திருமழிசை ஆழ்வார் வாழி திருநாமம் விளக்கவுரை
திருமழிசை ஆழ்வார் வாழி திருநாமம். அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே This is explained in this podcast. Please leave your comments by clicking the link below, as a voice message. Thank you for listening.  https://anchor.fm/adithya-raghavan0/message
Show more...
4 years ago
7 minutes 2 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
காஞ்சி பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
மகா பெரியவா சரணம் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மடத்தில் பெரியவா அணுக்கத் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். “இங்கே ஏகாம்பரேஸ்வரர் கோவில் பக்கத்துல ஒரு தெருவுல ஒரு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்குன்னு மடத்து குறிப்புக்கள் சொல்றது. உங்க யாருக்காச்சும் அது பத்தி தெரியுமா??”சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். “எங்களுக்கு தெரிஞ்சி அப்படி எதுவும் இல்லியே பெரியவா” பெரியவா தீர்க்கமாக யோசித்தார். “மடத்து குறிப்புக்கள் தப்பா இருக்காதே…”“நேர்லேயே போய் பார்த்துடுவோமே…” என்றவர் உடனே பரிவாரங்களுடன் மடத்து குறிப்புகள் சுட்டிக்காட்டிய இடத்துக்கு சென்றார். அது ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகே உள்ள லிங்கப்பன் தெரு. அங்கு சென்றவுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டு முன் நின்றார். “குறிப்புக்கள் சொல்றது இந்த வீடு தான்!” “இது சந்திரசேகர் ராவ் வீடோல்லியோ…” சிஷ்யர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். நடமாடும் தெய்வமே தங்கள் வீட்டு முன்னர் வந்து நிற்பதை கண்ட அந்த குடும்பத்தினர் பரவசமடைந்தனர். “பெரியவா பாதம் என் கிரகத்தில் பட நாங்கள் கொடுத்து வைத்திருக்கனும்…”அவர்களுக்கு தனது ஆசிகளை வழங்கிய பெரியவா சட்டென்று தேங்காய் உடைப்பது போல விஷயத்தை உடைத்தார். “உன் வீட்டை மடத்துக்கு விற்க முடியுமா?” மகா பெரியவா இப்படி திடுதிப்பென்று கேட்டவுடன் அந்த கிரகஸ்தரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. நாக்குழறி திக்கி திணறி “அது வந்து பெரியவா…. வந்து… இந்த வீடு ஒன்னு தான் எனக்குன்னு இருக்குற ஒரே சொத்து” என்றார். பெரியவா புன்முறுவல் செய்தபடி, “உன் குடும்பத்தார் கிட்டே கலந்து பேசு. உனக்கு எப்போ இந்த வீட்டை விற்கணும்னு தோணுதோ அப்போ என்னை வந்து பார்!” என்று கூறிவிட்டு புறப்பட்டார். சிறிது காலம் சென்றது. ஒரு நாள் சந்திரசேகர் ராவ் பெரியவாவை தரிசிக்க வந்தார். ராவ் சவரம் செய்து பல நாட்கள் ஆகியிருப்பதை உணர்த்தும் விதமாக முகத்தில் தாடி முளைத்திருந்தது. கண்களில் சோகம். “சொல்லுப்பா… எப்படியிருக்கே?”“மஹா சுவாமிகளுக்கு தெரியாததா? என் வீட்டை இப்போ விற்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்… என் பையனுக்கு உடம்பு சரியில்லே. ஆப்பரேஷன் செய்யவேண்டியிருக்கு. ட்ரீட்மெண்டுக்கு எதிர்பாராம நிறைய பணம் தேவைப்படுது!” “ஒரு நல்ல காரியத்துக்காகத் தான் பகவான் இப்படி நாடகமாடுறான். உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதே. எல்லாரும் சேஷமா இருப்பேள். மடம் சார்பா வேறு ஒரு நல்ல இடத்துல உனக்கு வீடு ஒதுக்கச் சொல்றேன்” என்று கைகளை உயர்த்தி ஆசி கூற, சாட்சாத் அந்த சர்வேஸ்வரனே கூறியது போலிருந்தது சந்திரசேகர் ராவுக்கு. கண்களில் ஓரமாக வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு பெரியவாளை வணங்கிவிட்டு புறப்பட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் கணபதி ஸ்தபதி பெரியவாளை தரிசிக்க வந்தார். “நேரே காமாட்சியம்மன் கோவிலுக்கு போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு, லிங்கப்பன் தெருவில் இருக்குற சந்திரசேகர் ராவ் வீட்டுக்கு போய் நான் சொல்ற இடத்தை யோசிக்காம தோண்டு… ஒத்தாசைக்கு ஆளுங்களை கூட்டின்டு போ” “பெரியவா உத்தரவு” என்று கூறி வணங்கிவிட்டு கணபதி ஸ்தபதி உடனே காமாட்சியை தரிசிக்க சென்றார். அவர் சென்றவுடன் பெரியவா நிஷ்டையில் ஆழ்ந்தார். அவர் மனம் இறைவனின் திருநாமத்தை ஜபித்தபடி இருந்தது. சந்திரசேகர் ராவ் வீடு. கணபதி ஸ்தபதி பெரியவா ஆட்களுடன் சென்று பெரியவா குறிப்பிட்ட இடத்தை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். காரணம் அது கழிவறை. அந்த காலத்து கழிவறை. “இந்த இடத்திலேயா தோண்டுறது?” கணபதி ஸ்தபதி தயங்கினார். பெரியவா காரணமில்லாம சொல்லமாட்டாரே…”பின்னர் தன்னை சமாதானப் படுத்திக்கொண்டு “ம்…தோண்டுங்க…” ஆட்களை பணித்தார். ஆட்கள் மளமளவென தோண்ட ஆரம்பித்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் ‘டங்’ என்று சத்தம் கேட்க, ஆட்கள் தோண்டுவதை நிறுத்தினார்கள். பாதுகாப்பாக மண்ணை விலக்கிவிட்டு பார்த்தால் ஒரு அழகிய சிவலிங்கம்…! “சம்போ மகா தேவா” கணபதி ஸ்தபதி கதறியே விட்டார். லிங்கம் இருக்கும் இடம் கழிவறை இருந்த பகுதியில் என்பதால் எத்தனை விரைவாக அதை அப்புறப்படுத்த முடியுமோ அத்தனை விரைவாக அதை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. லிங்கம் அசைந்து கொடுக்கவில்லை. லிங்கத்தை ஒரு பெரிய கயிற்றில் கட்டி இழுக்க முயற்சித்தார்கள். அப்போதும் முடியவில்லை. கோவில் யானையை கொண்டு இழுக்கலாம் என்று யாரோ யோசனை கூற, ஏகாம்பரேஸ்வரர் கோவில் யானை கொண்டு வரப்பட்டு, ஒரு பெரிய தாம்புக் கயிற்றில் லிங்கம் கட்டப்பட்டு யானையை கொண்டு இழுக்கப்பட்டது. அப்போதும் லிங்கம் அசைந்து கொடுக்கவில்லை. கணபதி ஸ்தபதி உடனே பெரியவாவை தரிசிக்க விரைந்தார்.மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க… பெரியவா முன் நின்றவர்…. நடந்ததை விளக்கினார். “சரி… வா புறப்படு….”கணபதி ஸ்தபதி திடுக்கிட்டார். “பெரியவா அது வந்து… நீங
Show more...
4 years ago
8 minutes 6 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
Say No. Let go.
"காஞ்சி மகா பெரியவாளின் அருள்"!! என் ஜாதி வழக்கத்திற்கு விரோதமாக, முதல் முறையாக அசைவம் சாப்பிட்டேன். இதோ மடத்துப் பிரசாதத்தை இன்று சாப்பிட்டு விட்டேன். இனி என் வாழ்நாளில் அசைவத்தைத் தொடமாட்டேன்.-செட்டியார். (பன்னிரண்டாம் செட்டியார் பிரிவு! செட்டியார் ஆசாரம்னா அப்படியோர் ஆசாரம். பரம்பரை பரம்பரையா தீவிர சைவாள். அசைவம் அவா பக்கத்திலேயே நெருங்காது--பெரியவா) அவர் திருப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர். காஞ்சிபுரம் செல்லும் போது மகா பெரியவரை தரிசனம் செய்வது வழக்கம். அன்று ஒரு நண்பருடன் சென்றார். அவரது நண்பரோ பெரியவரை அதுவரை தரிசித்ததில்லை. பெரியவரின் ஞாபக சக்தி அபாரமானது. ஆயிரக்கணக்கானோரை அவர் பார்த்தாலும், பலரது குடும்ப விபரங்களையும் நினைவில் வைத்திருந்து விசாரிப்பது வழக்கம். ஆடிட்டர் குடும்ப நலன்களை விசாரித்த பெரியவர், பின் அவரது நண்பரிடம் பேசினார். முதல் கேள்வியே நண்பரின் ஜாதியைப் பற்றியது தான். 'நாங்கள் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்!' பணிவோடு பதில் சொன்னார் நண்பர். பரமாச்சாரியார் மகிழ்ச்சியோடு செட்டியார் இனத்தவரின் பெருமைகளைச் சொன்னார். 'பாரத தேசம் முழுக்க செட்டியார்கள் செய்துள்ள நல்ல காரியங்கள் எத்தனை இருக்கின்றன தெரியுமா? காசிக்குப் போனால்கூட, அங்கே அவர்கள் கட்டிய தர்ம சத்திரம் இருக்கிறது. ஆலயத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் குலமல்லவா அது? நம் கலாசாரம் தழைத்திருப்பதில் செட்டியார்களின் பங்கு மகத்தானது...' என்று பல உதாரணங்களோடு தொடர்ந்து பேசியவர், அதோடு விடவில்லை. அவரிடம் மேலும் ஒரு கேள்வி கேட்டார். 'செட்டியார்களில் நிறையப் பிரிவுண்டே? நீங்கள் எந்தப் பிரிவு?' 'பன்னிரண்டாம் செட்டியார் பிரிவு!' 'அவா ரொம்ப ஒசந்த மனுஷா தெரியுமோ? ஆசாரம்னா அப்படியோர் ஆசாரம். பரம்பரை பரம்பரையா தீவிர சைவாள். அசைவம் அவா பக்கத்திலேயே நெருங்காது. வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை எத்தனையோ மகான்கள் புலால் உண்ணாமையைப் பெரிய விரதமாப் பேசியிருக்கா! புத்தர் கூடப் புலாலை எதிர்த்தவர் தான். இந்தச் செட்டியாரை உலகமே கும்பிடறதுன்னு வள்ளுவர் சொல்றார். புலாலை மறுத்தானை உலகம் கைகூப்பித் தொழும்னா அதானே அர்த்தம்?' இப்படி, செட்டியார் குலத்தின் பெருமையையும் முக்கியமாக புலால் உண்ணாமையின் மகத்துவத்தையும், விடாமல் பேசிக்கொண்டே போனார். தரிசனத்திற்கு வந்திருந்த அனைவரும் பெரியவரின் அமுதமொழியில் திளைத்தார்கள். அந்த நண்பரின் கண்களில் மட்டும் கரகரவெனக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆடிட்டருக்குத் தன் நண்பர் ஏன் அழுகிறார் என புரியவில்லை . 'நல்லது. க்ஷேமமா இருங்கோ!' என்று திருநீறு கொடுத்த பெரியவர், செட்டியாரைக் கூர்ந்து பார்த்தார். பின் ஓர் உத்தரவுபோல் சொன்னார். ''மடத்துல சாப்பாடு இருக்கும். சாப்பிட்டுட்டுப் போங்கோ.'' ஆடிட்டரும், நண்பரும் பெரியவரை வணங்கி, மடத்தில் சாப்பிட்டார்கள். சாப்பிடும்போது கூட நண்பரின் விழிகளில் கண்ணீர் தளும்பியே இருந்தது. மடத்தை விட்டு வெளியே வந்ததும், ஆடிட்டர் நண்பரிடம் கேட்டார்: ''பெரியவர் பேசும்போது ஏன் கண் கலங்கிக் கொண்டிருந்தீர்கள்?'' நண்பர் தழதழப்போடு பதில் சொன்னார்: 'அந்த மகான் பேசப்பேச நான் பிரமித்து, குற்ற உணர்வோடு உட்கார்ந்திருந்தேன். ஏனென்றால் நேற்றுத்தான் ஒரு நண்பரின் வற்புறுத்தலின் பேரில், என் ஜாதி வழக்கத்திற்கு விரோதமாக, முதல் முறையாக அசைவம் சாப்பிட்டேன். இதோ மடத்துப் பிரசாதத்தை இன்று சாப்பிட்டு விட்டேன். இனி என் வாழ்நாளில் அசைவத்தைத் தொடமாட்டேன்...'' நண்பர் விழிகளைத் துடைத்துக் கொண்டார். பெரியவர் மனிதர்களைத் திருத்தக் கடைப்பிடிக்கிற வழிகள்தான் எத்தனை விதம்... மற்றொரு சமயத்தில்.. ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..
Show more...
4 years ago
4 minutes 10 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
You’re infected
ஶ்ரீராமஜெயம்🙏 ""பிணி நீங்க மகாபெரியவர் சொல்லித் தந்த மந்திரம்"" காஞ்சி மகாபெரியவர் திவ்ய யாத்திரைகள் முடித்துவிட்டு மீண்டும் காஞ்சி மடத்திற்கு வந்து அங்கேயே முகாமிட்டிருந்த காலகட்டம் அது.. அந்த சமயத்தில் ஒருநாள் பரமாச்சார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்தில், நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியரும் இருந்தார்கள். அந்த மனைவிக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு என்பது சாதாரணமாகப் பார்த்தவர்களுக்கே தெரிந்தது. தாங்க முடியாத வலியின் காரணமாக தவித்துக்கொண்டிருந்தார். இப்போது வெளியில் வரட்டுமா? அல்லது இன்னும் கொஞ்சம் கழித்து வழியட்டுமா? என்று கேட்பதுபோல் அவரது கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. உடன் வந்திருந்த அவளது கணவர் மெதுவாகப் பேசி, அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மனைவியின் தவிப்பில் அவரது மனம் எவ்வளவு சங்கடப்படுகிறது என்பதை அவரது முகத்தோற்றமே படம்பிடித்துக் காட்டியது. மெதுவாக நகர்ந்த வரிசையில் தங்களுடைய முறை வரும்வரை பொறுமையாக நகர்ந்த அவர்கள், மகாபெரியவா முன் சென்று நின்றார்கள். இருவரும் ஒரு வார்த்தைகூட பேசுவதற்கு முன், "என்ன, ரொம்ப வலிக்கறதா? இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை மட்டும் போதாது. கொஞ்சம் மந்திரமும் வேணும்!" சொன்ன மகாபெரியவா, தன் பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு, ஏதோ சொன்னார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சீடர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி எடுத்துக் கொண்டுவந்து மகாபெரியவா முன் நீட்டினார். அதை அப்படியே பார்த்த மகாபெரியவா, "சரியா எழுதி இருக்கியா? ஒரு தரம் படிச்சுக்காமி!" என்றார். காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்ததை அந்த சீடர், சத்தமாகப் படித்தார். ""அஸ்மின் பிராத்மன் நநூ பாத்ம கல்பே தவம் இத்தம் உத்தாபித பத்மயோனி--- அநந்தபூமா மம ரோகராசிம் நிருந்த்தி வாதாலய வாச விஷ்ணோ ---"" சீடர் படித்து முடித்ததும், "இது, ஸ்ரீமந் நாராயணீயத்துல இருக்கற ஸ்லோகம்!" சொன்ன மகாபெரியவா, "இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு? எங்கே சொல்லு பார்க்கலாம்!" என்று கேட்டார். "பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. இது குருவாயூரப்பனைப்பத்தினை துதி. 'பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பனே, பத்ம கல்பத்தில் ப்ரம்மதேவனைத் தோற்றுவித்தவன் நீ. அளவற்ற மகிமையுடையவனாகிய நீயே எனது உடல் மனம் சார்ந்த எல்லா பிணிகளையும் நீக்கி ஆரோக்யம் அளிக்க வேண்டும்!' அப்படின்னு அர்த்தம்!" பவ்யமாகச் சொன்னார், சீடர். "என்ன, ஸ்லோகத்தை நன்னா கேட்டுண்டேளா? இதை நூத்தியெட்டுத் தரம் நம்பிக்கையோட சொல்லு..நல்லதே நடக்கும்!" சொல்லி மாதுளம் பழம் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார், மகாபெரியவா. அந்தத் தம்பதியும் ஆசார்யாளை நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆசார்யாளோ, அங்கே இருந்த வேற யாருமோ அந்தப் பெண்மணிக்கு என்ன உபாதைன்னு கேட்கவே இல்லை. இந்த சம்பவம் நடந்து நாலஞ்சு மாசம் இருக்கும். அந்தத் தம்பதியர் மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். இந்த முறை அந்தப் பெண்மணியின் முகத்தில் வலியின் ரேகை கொஞ்சம்கூட இல்லை. அவள் கணவரது முகமும் தெளிவாகவே இருந்தது. அமைதியாக வரிசையில் நடந்து, மகாபெரியவர் முன் சென்று நின்றார்கள். "என்ன நோய் போய்டுத்துன்னு டாக்டர்கள் சொல்லிட்டாளா? இனிமே ஒன்னும் பிரச்னை இல்லை. க்ஷேமமா இருங்கோ!" ஒன்றும் கேட்காமலே ஆசிர்வதித்தார் மகான். அவ்வளவுதான், கண்ணில் இருந்து நீர் பெருகி வழிய அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவரது திருப்பாதத்தில் விழுந்தார் அந்தப் பெண்மணியின் கணவர். "தெய்வமே...என் மனைவிக்கு மார்புல புற்று நோய் இருக்கு. அதை குணப்படுத்துவது கஷ்டம். ஆபரேஷன் பண்ணினாலும் ரொம்ப முத்திட்டதால பலன் இருக்குமான்னு தெரியாது! னு டாக்டர்கள் எல்லோரும் கைவிட்டுட்டா. மன அமைதியாவது கிடைக்குமேன்னுதான் போனதடவை இங்கே வந்தோம். ஆனா, என்ன பிரச்னைன்னே கேட்காம, அது தீர்ந்து இவளோட உடல்நிலை சீராகறத்துக்கு ஒரு வழியையும் காட்டின உங்க கருணையை என்னன்னு சொல்றது!" என்று உரத்த குரலில் சொல்லிக் கதறி அழுதார் அவர். "இதெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை. அந்த நாராயண மந்திரத்தை நீங்க நம்பிக்கையோட சொன்னதுக்குக் கிடைச்சிருக்கிற பலன்..க்ஷேமமா இருங்கோ...ஒரு குறையும் வராது!" மென்னகையோடு சொல்லி ஆசிர்வதித்த ஆசார்யா, குங்கும பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்தபோது, கூடியிருந்த பக்தர்கூட்டம், மகாபெரியவாளின் மகிமையைப் புரிந்து கொண்டு, கோரஸாகக் குரல் எழுப்பியது. ஓம் நமோ நாராயணாய🙏
Show more...
4 years ago
5 minutes 9 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
The beauty & power of Hanuman Chalisa
ஶ்ரீ ஹனுமான் சாலிஸாவின் மகிமை.. தினமும் ஒரு முறையேனும் பாராயணம் செய் யூங்கள். துன்பங்கள் பறந்தோடும் இன்பங்கள் வீடு தேடி வரும்..இது உண்மை.. ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், ”நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே. எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும் “என்று கிண்டலுடன் நக்கலாக கேட்டார். “ நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!" என்று ஶ்ரீ துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், மன்னனின் ஆணையை மதிக்கவில்லையென்று அவரை சிறையில் அடைத்தார். ‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்கா மல் சிறை சென்ற ஶ்ரீ துளசிதாசர், தினமும் ஶ்ரீ ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். மிகவும் சக்திவாய்ந்த ஹனுமான் சாலீசாவின் 40 ஆவது பாடலை எழுதி முடித்ததும், திடீரென எங்கிருந்தோ வந்த லட்சக்கணக்கான குரங்கு கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய் ய ஆரம்பித்தன. படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை. ஆயுதங்க ளைப் பறித்து அவர்களை காயப்படுத்தின. அக்பரிடம் சென்ற தளபதி “ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும் “என்று ஆலோசனை அளித்தார். அதைக் கேட்டவுடன் “போரில் வெற்றிபெறும் என் வீரர்கள் சாதாரண குரங்குகளுக்கு பயப்படுவதா?” என்ற ஆணவத்தால் போர் வீரர்களை மீண்டும் குரங்குகளை கொல்ல ஆணையிட்டார். ஆணையிட்ட அடுத்த நொடி வேறு புதிய குரங்கு கூட்டங்கள் அக்பரை நோக்கி ஆக்ரோ ஷத்துடன் வந்தன. உடனே அக்பர் தன்னைய றியாமல் கை கூப்பி, “துளசிதாசரே நான் தவறு செய்துவிட்டேன். மஹானே என்னை மன்னியுங்கள். குரங்குகளை வெளியே ஓடச் சொல்லுங்கள்” என்று கதறினார். உக்ரமாக வந்த குரங்குகள், அக்பர் துளசிதாச ரிடம் மன்னிப்பு கேட்டதால் அப்படியே கட்டுப் பட்டு நின்றன.. சிறிது நேரத்தில் அப்படியே மறைந்து விட்டன... அக்பருக்கு இது கனவா அல்லது நனவா என்று ஒரு நிமிடம் தடுமாறி விட்டார். எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்... அக்பர் இருக்கிறார் என்பதை மறந்து “ஜெய் ஶ்ரீ ராம்... ஜெய் ஹனுமான்!” என்று கோஷம் எழுப்பினார்கள். அதையடுத்து அக்பர் துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் மறுகணமே, சிறையி ன் வெளியே குவிந்து இருந்த குரங்குகள் ஶ்ரீ துளசிதாசர் சிறையை விட்டு வெளியே வரும் வரை காத்திருந்தன. ஶ்ரீ துளசிதாசர் வானரப் படைகளைப் பார்த்து தனது கரங்களைக் கூப்பி “ஜெய் ஶ்ரீ ராம்.. ஜெய் ஹனுமான்” என்று கண்ணீர் மல்க வணங்கினார். உடனே குரங்குக் கூட்டங்கள் மாயமாய் மறைந்தன. துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய 40 போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ ஹனுமான் சாலீஸா’... ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்...
Show more...
4 years ago
3 minutes 18 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
KVM gets blessed by Kanchi Maha Periyavar
பெரியவா திருவடியே சரணம். அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்து விடும்.. கவலைப்படாமல் வாருங்கள்!" ---'வாலி' அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள். (இருவர் பெயரிலும் என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்! இரண்டு பேருக்குமே சிவபெருமானுடைய பெயர்தான்!) இவர்களுள் கே.வி.மகாதேவன் அவர்கள் வாழ்க்கையில் சாட்சாத் மகாதேவனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவர் நடத்திய மகத்தான அற்புதத்தைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். கே.வி.மகாதேவன் அவர்களின் மகன், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஹிப்பி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் சொல்லாமல்,கொள்ளாமல் வீட்டைவிட்டே வெளியேறி எங்கோ சென்று விட்டான். துன்பத்தைத் துடைத்துக் கொள்ள கே.வி.எம்.. அவர்களுக்கு இசை கொஞ்சம் கை கொடுத்தது. ஆனால் அவரது மனைவியோ, என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தார்.(கையறு) அப்போது அவருக்கு ஆறுதலும்,தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர். "காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே,'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு 'வாலி' உதவுவார்!" என்றும் சொன்னார். மறுநாளே வீட்டுக்கு வந்த கவிஞர் வாலியிடம்,திருமதி கே.வி.எம். அவர்கள் விஷயத்தைச் சொல்ல, "அடடே காஞ்சிப் பெரியவரைப் பார்க்கப் போவதென்பது கரும்பு தின்பது மாதிரி. எனக்கென்ன கசக்குமா? நாளைக்கே புறப்படுங்கள்.சென்று வருவோம்!" என்றார் கவிஞர் மறுநாள், தேனம்பாக்கம் எனும் இடத்தில் மகா பெரியவா இருப்பதை அறிந்து அங்கே சென்றார்கள் எல்லோரும் மகாபெரியவாளை தரிசித்து அவரை நமஸ்காரம் செய்து எல்லாவற்றையும் சொன்னார்கள். அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மகான், பதில் எதுவும் சொல்லாமல், திருமதி கே.வி.எம். அவர்களை மட்டும் அழுத்தமாக தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,கொஞ்சம் குங்குமத்தை வழங்கிவிட்டு, உள்ளே சென்றுவிட்டார்.. மகான் ஆறுதல் சொல்வார், அனுகிரஹம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே...ஒருவேளை நம் மகன் திரும்ப வரமாட்டானோ என்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் அவர்கள். வழியில் வாலி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்." அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்துவிடும் ......கவலைப்படாமல் வாருங்கள்!" என்றார். அவர்கள் வீட்டை நெருங்கியபோது கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கியிருந்தது. வீட்டின் வாசலில் இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது. அழுக்கு உடை,பரதேசிக் கோலம் என்று நிழலாகத் தெரிந்தது. ஹிப்பிகளோடு சேர்ந்துவிட்ட தங்கள் மகனும் இப்படித்தானே இருப்பான். ஒருவேளை அவன்தான் மனம் மாறி திரும்பி வந்திருப்பானோ....மனதுக்குள் பதைபதைப்போடு காரில் இருந்து இறங்கி அவனை நெருங்கிய திருமதி கே.வி.எம். அப்படியே சிலிர்த்துப் போனார். ஆமாம் அவர்கள் மகன்தான் திரும்ப வந்திருந்தான். கண்களில் நீர் தளும்ப மகனை அணைத்துக்கொண்டு தேம்பினார்,தாய். "இன்னிக்கு காலைல ஒரு பத்து பதினொரு மணி இருக்கும். அப்போதுல இருந்தே, 'இந்த ஹிப்பி சகவாசம் சரிப்பட்டு வராது. உடனே வீட்டுக்குத் திரும்பிடணும்'னு மனசுக்கு உள்ளே கட்டளை மாதிரி ஒரு குரல் கேட்டுண்டே இருந்தது. நானும் யோசிச்சேன். அது சொல்றதுதான் சரின்னு தோணித்து. அதனால திரும்பி வந்துட்டேன்!" என்று சொன்னான் அவர்களின் மகன். மகன் தனக்குள் கேட்டதாகச் சொல்லும் அந்தக் குரல், காஞ்சி மகானின் குரல்....இல்லை இல்லை அந்தக் கடவுளின் குரல் என்றே தோன்றியது, திருமதி கே.வி.எம். அவர்களுக்கு. அங்கேயே நின்று உரக்கச் சொல்லத் தொடங்கினார், 'ஜயஜய சங்கர..ஹரஹர சங்கர..'! இன்னொரு முக்கியமான விஷயம். திருமதி கே.வி.எம். அவர்களிடம், 'காஞ்சி மகானை தரிசித்தால் பிரச்னை கண்டிப்பாகத் தீரும்' என்று ஆலோசனை சொன்னவர் யார் தெரியுமா? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.
Show more...
4 years ago
4 minutes 41 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
Kannadasan on Sage of Kanchi
Hara hara Sankara Jajaya Sankara. Arthamulla Indhumadham is a book by Kannadasan. He has written about the Sage of Kanchi as this. Pod is in Tamil language.
Show more...
4 years ago
7 minutes 20 seconds

South India Tamil Nadu Spirituality & goodness pod
I hope to record snippets that I find interesting about this great saint whom I had a luck of seeing once in my life, when I was a child. My podcasts are in Tamil which I believe is a language older than Sanskrit. And following the path just like Sanskrit, it’s now a dyeing language. #தமிழ் Contact adatsupport@gmail.com Please listen if you find Tamil hard read and hope you enjoy the content!