Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
Technology
Health & Fitness
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
Podjoint Logo
US
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts116/v4/a0/32/d3/a032d3b3-917d-48ca-78dd-7ff41bcb4fd4/mza_6677858072840130157.jpeg/600x600bb.jpg
Solratha sollitom| Hello Vikatan
Hello Vikatan
346 episodes
5 months ago
அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!
Show more...
Society & Culture
RSS
All content for Solratha sollitom| Hello Vikatan is the property of Hello Vikatan and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!
Show more...
Society & Culture
Episodes (20/346)
Solratha sollitom| Hello Vikatan
எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023

* கடன் தவணையை உரிய நேரத்தில் செலுத்தாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று சாக்லெட் கொடுத்து நினைவூட்ட உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது.

* கூலியாக மாறிய ராகுல்: டில்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார்...

* காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்று கூறிய நீதிபதிகள் காவிரியில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

* நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

* டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு 

* " தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க ஆக்ரோஷ அரசியல்தான் செய்வேன் " - அண்ணாமலை ...

"அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை இல்லை" - செல்லூர் ராஜூ

* * Khalistan: NIA-வால் தேடப்படும் குற்றவாளி; கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் ஆயுதப்போராளி சுட்டுக் கொலை!

-Solratha Sollitom.

Show more...
2 years ago
22 minutes

Solratha sollitom| Hello Vikatan
மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023

Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.  



* "மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவினரையும் சேர்க்க வேண்டும்" என்றார் சோனியா.

* மகளிர் இட ஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் அறிக்கை

* "பா.ஜ., குறித்து விமர்சிக்காதீங்க": நிர்வாகிகளுக்கு அதிமுக அறிவுறுத்தல்...

* நேற்று புதிய நாடாளுமன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தின்போது தங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் முன்னுரையில் `மதசார்பற்ற', `சோசியலிச' போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

* சவர்மா பிரச்னை

* கர்நாடக அரசு இந்தியா மீது குற்றச்சாட்டு


-Solratha Sollitom

Show more...
2 years ago
20 minutes

Solratha sollitom| Hello Vikatan
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/2023

Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.


* அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்தது

* மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் 

* இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு 

* சீமான் பிரச்னை


-Solratha Sollitom

Show more...
2 years ago
27 minutes

Solratha sollitom| Hello Vikatan
அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023

*ஒடிடி பரிந்துரை

*புத்தகப் பரிந்துரை

*அரசியல் அலசல்


Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.  


-Solratha Sollitom

Show more...
2 years ago
26 minutes

Solratha sollitom| Hello Vikatan
பி.ஜே.பியில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு அழுத்தமா? | Solratha Sollitom - 15/09/2023

* 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

* வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது , காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. 

* சீமானின் ஆவேசப்பேச்சு.

* நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

* பா.ஜ.க.வில் சேர்கிறீர்களா என்று அமலாக்கத்துறை கேட்டதாக கபில்சிபில் வாதம்

* சனாதனம் - உதயநிதி வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.   Vote us : https://bit.ly/3ZgMECQ

-Solratha Sollitom

Show more...
2 years ago
19 minutes

Solratha sollitom| Hello Vikatan
அமித்ஷா மீது பாயும் உதயநிதி! | Solratha Sollitom - 14/09/2023

* RBVS மணியன் கைது. 

* பெண்களும் இனி அர்ச்சகர்கள்

* நாடு முழுவதும் உள்ள அனைத்து 'சனாதனிகளும்', நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். - மோடி

* இந்தூரில் உள்ள கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தியாவில் சிலர் தொடர்ந்து சனாதனத்தை அவமதித்து வருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் தேசிய மதமாக உள்ள சனாதன தர்மத்தின் நிலைத்தன்மையை யாரும் கேள்விகேட்க முடியாது.

* பொன்முடி வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. .

* அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்துதமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?. நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

* 2வது முறையாக சீமானுக்கு சம்மன்...

* டில்லி சென்றார் பழனிசாமி...

* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்னிடம் ரூ.2,000 கோடி பேரம் பேசி வருகின்றனர். என்ன ஆனாலும் நான் அதிகாரிகளிடம் உண்மையைச் சொல்லுவேன்” - தனபால்.

* நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை அரசு வெளியிட்டது.


-Solratha Sollitom

Show more...
2 years ago
20 minutes

Solratha sollitom| Hello Vikatan
தீவிரமாகும் காவிரி பிரச்னை - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்? | Solratha Sollitom-13/09/2023

* புதிய நாடாளுமன்றத்தின் ஊழியர்களுக்கு, புதிய சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. ஆண் ஊழியர்களுக்கு இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக வழங்கப்பட்டிருக்கிறது. சட்டை முழுவதும் தாமரை படங்கள் இடம்பெற்றுள்ளன.

* ஹரியானா கலவரம், கொலை வழக்குகளில் தொடர்புடைய பசு பாதுகாவலர் மோனு மானேஸர் நேற்று கைது செய்யப்பட்டார்.

* சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறவில்லை. இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

* "எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பாஜகவினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பாஜகவின் ஊழல், மதவாத, எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது" என்று திமுகவினருக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

* பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் அந்த தொகை திருப்பியளிக்கப்படும் என்று ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் சிஇஓ ஹேமந்த் ராஜா தெரிவித்துள்ளார்.

* காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி ஆலோசித்தனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. .

"காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் கடைசி முடிவு. இந்த வழக்கில் வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். அதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.


-Solratha Sollitom

Show more...
2 years ago
18 minutes

Solratha sollitom| Hello Vikatan
வன்முறையைத் தூண்டும் மத்திய அமைச்சர் - கண்டிப்பாரா மோடி? | Solratha Sollitom-12/09/2023

* கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி ஆடியபோது ஒவ்வொரு போட்டியின்போதும் அணியின் பயிற்சியாளர் ஐகோர் ஸ்டைமேக், ஜோதிடர் பூபேஷ் சர்மாவை கலந்தாலோசித்த விவகாரத்தில் மேலும் பல விஷயங்கள் வெளியாகியுள்ளன. 

* சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை வெட்டுவோம்; கண்ணைப் பிடுங்குவோம் - மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்

* உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்திய அண்ணாமலை

* டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்ற கருத்தை வலியுறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 

* காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. 

* பட்டியலினப் பெண் சமைத்த உணவைச் சாப்பிட மறுத்த பள்ளிக்குச் சென்ற கனிமொழி. 

* மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது : தற்போது ஜி-20 உச்சி மாநாடு முடிந்து விட்டது. இனியாவது மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். 

* மீண்டும் அமலாக்கத்துறை சோதனை

* எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.


-Solratha Sollitom

Show more...
2 years ago
25 minutes

Solratha sollitom| Hello Vikatan
பா.ஜ.கவைச் சீண்டிய உதயநிதி...அத்துமீறிய ஹெச்.ராஜா! | Solratha Sollitom-11/09/2023

* அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜா

* ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பிரச்னை

* சனாதனம் குறித்து விவாதிக்க ஸ்டாலினுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அழைப்பு

* தூத்துக்குடி அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக சொல்லப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

* திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல்போன பட்டியலின ஊராட்சித்தலைவி

* ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது

* தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி நகராட்சி இடத்தில் 3 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

-Solratha Sollitom

Show more...
2 years ago
25 minutes

Solratha sollitom| Hello Vikatan
தேசிய அரசியலில் தி.மு.க.வின் இடம் என்ன? | Solratha Sollitom-09/09/2022

* புத்தகப்பரிந்துரை

* ஓ.டி.டி பரிந்துரை

* தேசிய அரசியலும் திமுகவும் - அலசல்

-Solratha Sollitom

Show more...
2 years ago
28 minutes

Solratha sollitom| Hello Vikatan
எடப்பாடிக்கும் சிக்கல், ஸ்டாலினுக்கும் சிக்கல்! | Solratha Sollitom-08/09/2023

* "இமாச்சலப்பிரதேசத்தில் இறைச்சி சாப்பிடுவதால்தான் இயற்கைப்பேரிடர்கள்" - ஐ.ஐ..டி இயக்குநர்

* இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்...!

* ஐ.பெரியசாமி, வளர்மதி வழக்குகள் மறுவிசாரணை

* சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய இன்று காலையில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

* சாத்தான்குளம் வழக்கு - சப் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

* பல்லடம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் சுட்டு பிடிக்கப்பட்டார்

* மோடி பிறந்த நாளையொட்டி 73 ஜோடிகளுக்குத் திருமணம் - அண்ணாமலை அறிவிப்பு

* வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

* "இனி இந்தியாவை பாரத் என்றே எழுத வேண்டும்" - மோகன் பகவத்.

-Solratha Sollitom

Show more...
2 years ago
23 minutes

Solratha sollitom| Hello Vikatan
மோடிக்கும் ஆளுநருக்கும் செக் வைத்த ஸ்டாலின்! | Solratha Sollitom-07/09/2023

* சனாதன எதிர்ப்பு குறித்து ஸ்டாலின் விரிவான அறிக்கை

* உதயநிதியை அறைந்தால் 10 லட்சம் என்று ஆந்திராவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பான ஜன ஜாகரணா சமிதி தெரிவித்துள்ளது.

* இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 'இந்திய ஒற்றுமை யாத்திரையின் அன்பை நோக்கிய நடைபயணம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக மாறியுள்ளது. இந்த பயணம் தொடரும்.. வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை. இது என்னுடைய வாக்குறுதி' என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கூறும்போது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யாது. அப்படி செய்யும்போது, பா.ஜ.க. ஒரு பக்க முடிவை எடுத்து விடும் என கூறியுள்ளார். முக்கிய விவகாரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதனை நாங்கள் முன்வைப்போம் என்று பேசியுள்ளார். 

* "பா.ஜ.க -அ.தி.மு.க உறவு கணவன் - மனைவி உறவு போன்றது. அதைப்பற்றி தினமும் விளக்க வேண்டியதில்லை" - ஹெச்.ராஜா

* மூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு முறைக்கு ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதரவு தொடரும் என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.


-Solratha Sollitom

Show more...
2 years ago
20 minutes

Solratha sollitom| Hello Vikatan
உதயநிதிக்கு ஸ்பீடு பிரேக்கர் போடுமா இந்தியா கூட்டணி? | Solratha Sollitom - 06/09/2023

* திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். கைதான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

* பல்லடம் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது.

* காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. 

* இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் 13-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* 'ஜி-20 இந்தியா' செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

* நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும். விவாதப்பொருள் பட்டியல் தரவில்லை; அதில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். மேலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை குறித்தும் பேச வேண்டும் என சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

* சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

* சேவாக்கின் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன்... இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவை ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

* பாரதம் என்ற குடும்பமாக வாழ்வோம்: கவர்னரின் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து...

* சனாதனம் குறித்த கருத்துக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

-Solratha Sollitom

Show more...
2 years ago
16 minutes

Solratha sollitom| Hello Vikatan
'இந்தியா' பெயரை மாற்றப்போகிறதா பா.ஜ.க? | 05/09/2023

* முஸ்லீமான எனக்குக் கோயில் கட்டியதுதான் சனாதனம் - குஷ்பு

* ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. .

* "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. - ஸ்டாலின்

* நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 'பாரத்' என்ற பெயர் மாற்றம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

* 'இண்டியா' கூட்டணி பெயரை 'பாரத்' என மாற்றினால் என்ன செய்வீர்கள்?: கெஜ்ரிவால்...

* சசிகலா, இளவரசி இருவருக்கும் ஜாமீனில் வெளியே வராதபடி பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

* அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்திருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டுக் கொளுத்தும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

* அன்னிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் எம்.பி., தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என அமலாக்கத்துறையிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

* பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


-Solratha Sollitom.

Show more...
2 years ago
26 minutes

Solratha sollitom| Hello Vikatan
தி.மு.க.விடம் சரணடைகிறாரா சீமான்? | Solratha Sollitom - 04/09/2023

* பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு ஆர்டிஐ மூலம் கோரப்பட்டிருந்த கேள்வியில், "ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவின் பிரதமர் ஒருவர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

* உதயநிதியின் 'சனாதன ஒழிப்பு பேச்சு'க்கு பா.ஜ.க, வலதுசாரிகள் எதிர்ப்பு

* சென்னை ஐகோர்ட், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

* "திமுகவுடன் இருப்பது பங்காளிச்சண்டைதான். திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்லவில்லை. மோடியை எதிர்த்து நின்றால் தி.மு.க.வை ஆதரிப்பேன்" - சீமான்

* பல்வேறு புகார்களின் எதிரொலியாக, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியர் அலி மற்றும் அவரது மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவியை திமுக தலைமை பறித்துள்ளது.

* மது காரணமாகத் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 4 பேர் கொலை.

-The Imperfect Show

Show more...
2 years ago
26 minutes

Solratha sollitom| Hello Vikatan
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை எதிர்கொள்ளுமா பா.ஜ.க? | Solratha Sollitom-02/09/2023

* ஓ.டி.டி பரிந்துரை

* புத்தகப்பரிந்துரை

* நாடாளுமன்றத் தேர்தல் அலசல்

-Solratha Sollitom

Show more...
2 years ago
26 minutes

Solratha sollitom| Hello Vikatan
ஸ்டாலின் அரசைக் கலைக்க மோடி திட்டமா? | Solratha Sollitom-01/09/2023

* அண்ணாமலை 2-ம் கட்ட யாத்திரையை வருகிற 4-ந்தேதி தொடங்குகிறார்.

* ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படவிருக்கிறது 'ஆதித்யா எல்-1' விண்கலம்.

* கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

* சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாமக-வை சேர்ந்த சதாசிவம் மீது வரதட்சணைப்புகார் 

* நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாளர் விசாரணை 

* எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு 

* ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய தவறான செயல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

-Solratha Sollitom

Show more...
2 years ago
22 minutes

Solratha sollitom| Hello Vikatan
பன்னீர்செல்வத்துக்கு விசாரணை சிக்கல் ; செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் சிக்கல்! | Solratha Sollitom-31/08/2023

* முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. 

* முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 

* காவிரி பிரச்சினையில் கர்நாடகா இதுவரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட தண்ணீர் தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

* செந்தில்பாலாஜிக்கு எந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது என்பதில் சிக்கல்

* ஸ்டாலின் தொடங்கும் பிராட்காஸ்ட்

* * செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

-Solratha Sollitom

Show more...
2 years ago
20 minutes

Solratha sollitom| Hello Vikatan
மோடி பொய் சொல்கிறார் - குற்றம் சாட்டும் ராகுல்! | Solratha Sollitom-30/08/2023

* ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைப்பு

* "நான் தமிழகத்தில் தனியாக நின்று தேர்தலை சந்திக்க தயார். ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனாதாவினர் என்னை எதிர்த்து ஒரு சதவீதம் வாக்கு அதிகமாக வாங்க முடியுமா? பா.ஜ.க.வில் 40 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளர்கள் உள்ளார்களா?" - சீமான்

* கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

* ஒரே நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் எடப்பாடி, கனிமொழி

* "மோடி வாரணாசியில் போட்டியிட்டால் சீமான் வாரணாசியில் போட்டியிடத் தயாரா?" - அண்ணாமலை

* நாளை மும்பையில் நடக்கவிருக்கும் இந்தியா கூட்டணி ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் பயணம்

* கர்நாடக முதல்வர் சித்தராமையா அணைகளில் தண்ணீர் வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியதை தான் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகையால் வேறுவழி கிடையாது. மறுபடியும் நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதான்- துரைமுருகன்.

-Solratha Sollitom.

Show more...
2 years ago
22 minutes

Solratha sollitom| Hello Vikatan
Edappadi -யைப் பார்த்து பொறாமைப்படுகிறாரா M.K.Stalin? | Solrathai Sollitom-29/08/2023

* தமிழ்நாடு எதிர்பார்க்கும் அளவு காவிரி நீர் திறந்துவிட முடியாது - கர்நாடகம்

* மத்திய அரசின் 'விஸ்வகர்மா யோஜனா' என்ற திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்.

* நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள். விஜய் நல்லது செய்ய வேண்டும் என ஒரு வாக்காளராக நினைக்கிறேன்' என்றார். மேலும், தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது என்றும் விஷால் கூறினார்.

* அதிமுக மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து திமுக மாநாட்டை நடத்துகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்துதான் சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல. மக்களவை தேர்தலுக்கான முதல்கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு அடித்தளம் கடுமையாக அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி

* தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்துசெய்யக் கோரி ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். நான்கு வழக்குகள் மட்டும் தள்ளுபடி.

-Solratha Sollitom

Show more...
2 years ago
19 minutes

Solratha sollitom| Hello Vikatan
அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!