All content for இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan is the property of CAS Institute India and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Motivational stories and messages from good books.
எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பு பாராட்டி உதவும் குணம் உடையோர்,இறைவனால் கைதூக்கிவிடப்படுவர்.அன்பு மயமாக இருப்போருக்கு தேவை எதுவோஅது இறைவன் அருளால் எங்கிருந்தாயினும் கிடைக்கும். அன்பே சிவம்
அடாவடித்தனமாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் வாழ்க்கையில்?ஒளவையாரின் கொன்றைவேந்தனிலிருந்து.....யோசித்து திருந்த வேண்டிய அருமையான யதார்த்தம் நிறைந்த கதை திருமதி S R ELIZEBETH,CORRESPONDENT,MANUAL MONY MAT.HR SEC.SCHOOL,PALAVAKKAM,CHENNAI
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்*** கோபத்தால் தீங்கு செய்தவருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது குற்றமற்றவர்களுடைய கொள்கையாகும்
தெய்வத்தான் ஆகா தெனினும்,முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.""இயற்கையால் முடியாத செயலாயினும் விடாமுயற்சியானது ஊழைப்பிற்கேற்ற பயனைத் தந்தே தீரும். ஆகவே நாம் மனச்சோர்வடையாமல் விடாமுயற்சியுடன் எந்த ஒரு காரியத்தையும் வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு""- யார் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதைக் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்ற வள்ளுவர் வாக்கின் படி நாம் நடப்போமாயின் நாம் சிறந்த அறிவாளி ஆகலாம்.
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்**பழிச்சொல்லுக்கு அஞ்சுகிற பெருமக்கள் தினையளவு சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்வர்