
John Chapter 8
வெளிச்சம் உண்டாகட்டும்'
ஆம், கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும்.
வாருங்கள் வார்த்தையை படிக்கலாம்.
படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம்.
அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம் வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும்.
இலையுதிரா மரம் போல நாம் கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம்.
அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட.
வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக.
வெளிச்சம் உண்டாகட்டும்!
28.ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
29. என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.