
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். யோவான் 7 :16,17
John Chapter 7
வெளிச்சம் உண்டாகட்டும்'
ஆம், கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாகட்டும்.
வாருங்கள் வார்த்தையை படிக்கலாம்.
படித்தபின் சற்று நேரம் அமர்ந்திருந்து அதை தியானிப்போம். நீர் கால்கள் ஓரம் நடப்பட்ட மனுஷன் போல் வார்த்தையில் நிலைத்து நிற்கலாம்.
அப்படி செய்யும் போது நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளர வளர கிருபையும் சமாதானமும் நம் வாழ்வில் பெருகிக்கொண்டே இருக்கும்.
இலையுதிரா மரம் போல நாம் கிறிஸ்துவுக்குள் வேரூன்றி செழித்து நிற்போம்.
அதுவே நமது பிதாவின் சித்தம். அதுவே கிறிஸ்துவின் வாஞ்சையும் கூட.
வாருங்கள் வார்த்தையை படிக்கலாம். ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவாராக.
வெளிச்சம் உண்டாகட்டும்!