
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- தெரிசை சிவா - உயிர்மெய்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன். சிவா என்ற இயற்பெயர் கொண்ட தெரிசை சிவாவின் பிறந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு ஆகும். வேதியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது துபாயில் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது. அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும். மேலும் வெளியாகி உள்ள இவரது புத்தகங்கள் தாச்சி, தகர் என்பன ஆகும். மண்சார்ந்த வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளருக்குப் பரிசு கொடுக்கும் காலக்ஸி குழுமம் 2025 ஆம் ஆண்டுக்கான பாண்டியன் பொற்கிழி பரிசை தெரிசை சிவா அவர்களுக்கு அளித்துப் பெருமைப்படுத்தியது.