சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- தெரிசை சிவா - உயிர்மெய்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன். சிவா என்ற இயற்பெயர் கொண்ட தெரிசை சிவாவின் பிறந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு ஆகும். வேதியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது துபாயில் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது. அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும். மேலும் வெளியாகி உள்ள இவரது புத்தகங்கள் தாச்சி, தகர் என்பன ஆகும். மண்சார்ந்த வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளருக்குப் பரிசு கொடுக்கும் காலக்ஸி குழுமம் 2025 ஆம் ஆண்டுக்கான பாண்டியன் பொற்கிழி பரிசை தெரிசை சிவா அவர்களுக்கு அளித்துப் பெருமைப்படுத்தியது.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.ஸ்தீரீ ரத்னா, பாரதீய யுவ கேந்திரா வழங்கிய சிறந்த பெண்மணி விருது'அமரர் சுஜாதா’ விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, ஜி யூ போப் விருது, ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ விருது, அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது விஜயா வாசகர்வட்ட விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகளாக'பருவங்கள்மாறும்', 'புதிய பிரவேசங்கள்', ‘தடை ஓட்டங்கள்', தேவந்தியும் வெளிவந்துள்ளன. யாதுமாகி, தடங்கள், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், நாவல்களும்இவற்றைத் தவிர நிறைய மொழிபெயர்ப்பு நூல்களும் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.ஸ்தீரீ ரத்னா, பாரதீய யுவ கேந்திரா வழங்கிய சிறந்த பெண்மணி விருது'அமரர் சுஜாதா’ விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, ஜி யூ போப் விருது, ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ விருது, அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது விஜயா வாசகர்வட்ட விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகளாக'பருவங்கள்மாறும்', 'புதிய பிரவேசங்கள்', ‘தடை ஓட்டங்கள்', தேவந்தியும் வெளிவந்துள்ளன. யாதுமாகி, தடங்கள், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், நாவல்களும்இவற்றைத் தவிர நிறைய மொழிபெயர்ப்பு நூல்களும் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- முனைவர் மீனாட்சி பாலகணேஷ் - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் பிரதிலிபி இணையத்தளம் ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதியஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, சொல்வனத்தில் தொடராக வந்த டால்ஸ்டாயின் ‘ "காகசஸ் மலைக்கைதி" (Caucasus Prisoner) ’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது.மற்றும் மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்ற ‘சித்ரா’ , குவிகத்தில் “கங்கை எனது தாய்” என்ற குறும்புதினம் போன்ற படைப்புகள் இவரின் இலக்கியப் பயணத்தின் சான்றுகள். தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை!, ஸ்ரீ அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் மொழிபெயர்ப்பு, பருவம் பற்றி கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார் “தெய்வக் குழந்தைகளைப் பாடும் பிள்ளைத்தமிழ்” என்ற காணொளித் தொடரில் அழகாகப் பாடி அருமையாக விளக்கமும் அளித்துள்ளார் .
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’ஊழிப் பெருவெள்ளம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/ஊழிப்-பெருவெள்ளம்/
சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில்.
இவரது ஊழிப் பெருவெள்ளம் சிறுகதை 2015 சென்னை வெள்ளத்தைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு குடும்பத்தின் அனுபவத்தை விவரிக்கிறது. கதை நகைச்சுவை, பதற்றம், உணர்ச்சி ஆகியவற்றை இழைத்துக் கலந்து வழங்குகிறது.
உயிர் காப்பான் தோழன் என்பது ஒரு பழைய சொல் வழக்கு. ஆனால் உயிர் காக்கும் பட்டம் சான்றிதழ் என்று கதை உணர்த்துகிறது
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்-அமீரா கார்த்திக் -’தும்ரி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/தும்ரி/
இயற்பெயர் கார்த்திகேயன் .
ஆசிரியராக பணியாற்றுகிறார்
ஆமிரா , ஆமிராபாலன் என்ற பெயர்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகின்றார் .இவர் எழுதிய சிறுகதைகள் சொல்வனத்தில் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சிறுகதைகளும் எழுதி வருகிறார். இந்தோனேஷிய கவிஞர் (Sapardi Djoko Damono
) சபார்டினோ ஜோக்கோ தமனோவின் கவிதைகளை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்திருக்கிறார்.)
நீங்கள் எழுதிய “தும்ரி” கதை, இலக்கியம், இசை இணைந்து வெளிப்படும் காதல் உணர்வுகளின் ஆழமான பயணத்தையும், மனித உறவுகளின் சிக்கல்களையும், இசை மற்றும் இலக்கியத்தின் வழியாக மானுட அனுபவங்களை ஆராயும் ஒரு புனைகதையாக விளங்குகிறது. இந்தக் கதை, உணர்ச்சி மற்றும் கலை வெளிப்பாட்டின் கலவையாக, தனிமனித உணர்வுகளின் பல கோணங்களையும், அவை சமூக மற்றும் கலாச்சார சூழல்களுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் ஆராய்கிறது.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- M. A. சுசீலா -’முகமூடி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2021/03/14/முகமூடி/
இவரது “முகமூடி” ஒரு உணர்வுபூர்வமான மற்றும் ஆழமான சிறுகதை. இது ஒரு எளிமையான யாத்திரை அனுபவத்தின் பின்னணியில் மனித உறவுகள், எதிர்பாராத உதவி, இழப்பின் வலி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசுகிறது. கதை, அக்கா மற்றும் அம்மு என்ற மூத்த குடிமக்கள் இருவரின் கேதார்நாத் யாத்திரைக்கான முயற்சியைச் சுற்றி நிகழ்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் உதவும் ஒரு மர்மமான 'முகமூடி' அணிந்த மனிதரும் கதையின் மையக்கரு.
இந்தக் கதை மனிதர்களை வெளித்தோற்றத்தைக் கொண்டு எடைபோடக் கூடாது என்ற செய்தியை வலியுறுத்துகிறது.
என்று எனக்குத் தோன்றுகிறது.
எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்
மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.
சொல்வனம்- புனைவு வனம்: நிதீஷ் கிருஷ்ணா -’எஸ்கார்ட்’ - எழுத்தாளர் சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/எஸ்கார்ட்/
நிதீஷ் கிருஷ்ணா An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இவரது எஸ்கார்ட் சிறுகதையில் நிதீஷ் தினமும் இரவு பணிக்குப் பின் அலுவலக காரில் விடுதிக்குத் திரும்பும்போது, பெண் சக ஊழியர்களை முதலில் இறக்கிவிட்டு, கடைசியாக அவரை விடுவதால் தாமதமாகிறது. இதைப் பற்றிப் பொறுப்பாளரிடம் புகார் செய்தபோது, பெண்களின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு என்ற பதிலே கிடைத்தது.
ஆனாலும் சில நாட்களுக்குப் பின், நிதீஷுக்கு இரண்டு இடங்களில் மட்டும் நிறுத்தும் சிறப்பு ஏற்பாடு கிடைத்தது. அன்று, அவருடன் ஒரு பெண் மட்டுமே பயணித்தாள். பயணத்தில், டிரைவர் ஒரு விபத்தை நினைவுகூர்ந்தார்—அதே காரில் முன்பு ஒரு விபத்து நடந்ததாகவும், அந்தப் பெண்தான் பின்னர் மீண்டும் அவருடன் பயணிக்கத் துணிந்ததாகவும் கூறினார்.
இரவில் ஒதுங்கிய பகுதியில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டபோது, நிதீஷுக்கு பயமாக இருந்தது. ஆனால் டிரைவர் அமைதியாக, நாள்தோறும் நான் அவளுக்கு எஸ்கார்ட்தான் என்று சொல்லி, பாதுகாப்பான வாழ்வின் நிழலில் ஒரு கணம் நிற்கச் செய்தார்.
புறத்தே தோன்றாத பயங்களும், பாதுகாப்பின் அர்த்தங்களும் வாழ்க்கையில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.
Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு
சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/தருணங்கள்/
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம்
'தருணங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல்
எழுத்தாளர்: சோழன்
உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்
எழுத்தாளர் சோழன்- சிறு முன்னுரை
சோழன்
சொந்த ஊர் தஞ்சாவூர். இயற்பெயர் ராஜ ராஜ சோழன். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூபாளம், நடுகல், சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
இவரது தருணங்கள் கதை நம் தினசரி வாழ்வில் கவனிக்காமல் போவதை கவனமாக ரசிக்க வைக்கும். நம்மை சுற்றி நிகழும் இயற்கையும் மனித உறவுகளும் எவ்வளவு சுகமானவையென உணர வைக்கும் மென்மையான மற்றும் உள்ளுணர்வோடு கூடிய கதை இது. இய்ற்கையின் சத்தங்கள் அனைத்தும் பாடலாக அதன் மூலம் இன்னிசையாக உணரப்படுகிறது!
கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம்
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர். கே.ஜே. அசோக்குமார் கடந்த
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்
தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்
என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளனன.
இவருடைய நாவல்கள்
ரமணிகுளம், யாக்கை ஆகும்
வாசகசாலை இலக்கிய விருதும், நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றுள்ளன
சொல்வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் - சசிகலா ரகுராமன் -காவேரி
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம்
'காவேரி'- சிறுகதை குறித்த உரையாடல்
எழுத்தாளர்: சசிகலா ரகுராமன்
உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்
வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்
வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்
வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்
கதையை வாசிக்க: https://solvanam.com/2025/02/09/காவேரி/
சசிகலா ரகுராமன் கணிதம் படித்துவிட்டு, காப்பீட்டுத் துறையில் பணி புரிகிறார். ஒரு பக்கக் கதைகள் , சிறுகதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டுள்ளார் . சில சிறுகதைகள் இணையப் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன . சில வருடங்களாக சொல்வனத்தின் தீவிர வாசகி இவர்.
சொல்வனம் - புனைவு வனம்-ஆசிரியரைச் சந்திப்போம் - கலித்தேவன்-புத்தனின் புன்னகை
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம்
'புத்தனின் புன்னகை'- சிறுகதை குறித்த உரையாடல்
எழுத்தாளர்: கலித்தேவன்
உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்
வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்
வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்
கதையை வாசிக்க: https://solvanam.com/2025/01/12/புத்தனின்-புன்னகை/
வி.கலியபெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கலித்தேவன் ITI தொழில் படிப்பு முடித்து சொந்தமாகத் தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார்.
40 ஆண்டுகளாக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்.
சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும், சொல்வனம், நடுகல், மயிர் , அகழ் இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
கலித்தேவன் அவர்கள் சொல்வனத்தில் எழுதிய "புத்தனின் புன்னகை" கதை, மனித இயல்பின் சிக்கலான தன்மையையும், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் முரண்பாடுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், பார்சல் கொடுக்கும் பணியாளரின் கதாபாத்திரம். பகலில் "புத்தர்" போன்ற அமைதியான புன்னகையுடன், பொறுமையின் உச்சமாகத் தோன்றும் ஒருவரே, இரவில் முழு போதையில், கட்டுப்பாட்டை இழந்து அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவதைக் காண்பது மிகவும் வியப்பளிக்கிறது. இது, மனிதர்கள் பல முகங்களைக் கொண்டவர்கள் என்பதையும், வெளிப்புறத் தோற்றத்திற்கும் உண்மை நிலைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருக்கலாம் என்பதையும் ஆழமாகச் சிந்திக்கும்படி தூண்டுகிறது. அவருடைய புன்னகை, ஒருவேளை சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகப் போடப்பட்ட முகமூடியாக இருக்கலாம், அல்லது அவரது ஆழ்மனதில் உள்ள அமைதியின் வெளிப்பாடாக, அவரது போதை நிலையிலும் கூட வெளிப்படலாம். இது ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு.
மேலும், அவசரக்காரர் கதாபாத்திரமும், பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்களும் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மன அழுத்தங்களையும், பொறுமையின்மையையும் மிக யதார்த்தமாகப் பிரதிபலிக்கின்றன. மணிவாசகத்தின் பொறுமை, அமைதி, மற்றும் பிறருக்கு உதவும் குணம் ஆகியவை இந்த பரபரப்பான உலகில் ஒரு குளிர்ச்சியான நீரோடை போல இருக்கின்றன.
கதையின் மையப்பகுதி ஆர்ய பவனில் நடக்கிறது. ஆர்ய பவனுக்கு வருவதற்கான முகாந்திரத்தை அழகாக் கொண்டு வந்திருக்கிறீர்கள் கலித்தேவன்.
கதையின் ஓட்டம், கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடு ஆகியவை வாசிப்பதற்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றன. இது வெறும் ஒரு சாதாராண சம்பவத்தை விவரிக்கும் கதை மட்டுமல்ல, மனித உளவியல் மற்றும் சமூக யதார்த்தங்கள் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.
மொத்தத்தில், "புத்தனின் புன்னகை" ஒரு நல்ல சிந்தனையைத் தூண்டும் கதை.
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம்
'புகையும் நிஜங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல்
எழுத்தாளர்: H. N. ஹரிஹரன்
உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்
கதையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/புகையும்-நிஜங்கள்/
H. N. ஹரிஹரன்
விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.
1981 முதல் கதைகள் எழுதி வருகிறார். கல்கி,ஆனந்தவிகடன், கணையாழி, குமுதம் ஆகிய பிரபல பத்திரிக்கைகளிலும், பூபாளம் சிற்றிதழிலும் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.
பூபாளம் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்திருக்கிறார். இப்போதும் அதன் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்து வருகிறார்.
வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் எழுதத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் சொல்வனம், கல்கி, குமுதம், பூபாளம், லேடீஸ் ஸ்பெஷல், அமுதசுரபி பத்திரிக்கைகளிலும், குவிகம், சொல்வனம் மின்னிதழ்களிலும் அவரது கதைகள் வெளியாகி உள்ளன.
‘எல்லாம் தெரிந்தவள்', 'கனவுச் சங்கிலி', ‘அப்பாவின் சைக்கிள்’, ‘கல்லடிப் பாலம்' எனும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், 'நீ இன்றி அமையாது உலகு' எனும்
குறும்புதினத் தொகுப்பும் வெளியாகி உள்ளன.
‘The Moplah Rebellion, 1921' எனும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ‘மாப்ளா கிளர்ச்சி, 1921’ எனும் தலைப்பில், 2021ம் ஆண்டு வெளியானது.
தவிரவும், 'சார்தாம் யாத்திரை- பயணக்கட்டுரை', 'நன்மை தரும் நால்வர் பதிகங்கள்', 'பதினாறு பேறுகளையும் அளிக்கும் திருப்புகழ்' எனும் ஆன்மீக நூல்களும், 'நெகிழிவயலும், நியூசிலாந்து தமிழ் மணியும்' எனும் கட்டுரைத் தொகுப்பும் அமேசான் கிண்டில் மூலம்
பிரசுரிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று அவரது கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.
2023ல் குங்குமம் பத்திரிகையில் வெளியான அவரது ‘கல்லடிப் பாலம்' எனும் சிறுகதை, 2023-24ம் வருடத்தின் சிறந்த சிறுகதையாக மூன்றாம் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது பெயரிலேயே வழங்கப்படும் பரிசாகும் இது.
கல்லடிப் பாலம்' எனும் சிறுகதை, குங்குமம் இதழின் சிறந்த சிறுகதையாக மூன்றாம் பரிசைப் பெற்றது.
இவரருடைய “புகையும் நிஜங்கள்” சிறுகதை நகர்ப்புற வாழ்க்கையின் சிக்கல்களை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது. செந்தில் என்ற கதாநாயகனின் வாழ்க்கை, குடும்ப உறவுகள், வாடகை வீட்டு மாற்றத்தில் சுடுகாட்டின் அருகில் வாழும் அனுபவங்கள் மூலம், சமூக மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் அதாவது தாயின் மனநிலை போன்றவை வெளிப்படுகின்றன.
மதன் சோணாச்சலம் சியாட்டிலில் வசிக்கிறார். மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் இவர் தீவிர இலக்கிய வாசகர். கட்டுரைகள், உரைகள் ஆற்றியிருக்கிறார். https://medium.com/@sirukurippugal/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-e509842d7eeaஅவர் எழுதிய முதல் சிறுகதையான நீலவாகா பற்றிய கலந்துரையாடல் இது. கலந்து கொண்டவர்கள் திரு. மதன் சோணாச்சலம், திரு. பாலாஜி ராஜு, திரு. விஜய் சத்யா. தொகுத்தளித்தவர் ஜமீலா. Gநீலவாகா படிக்க:https://solvanam.com/2025/01/26/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE/காணொளி தயாரிப்பு: ஜமீலா. G
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: ராம் பிரசாத் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/இரண்டாம்-அடுக்கு-பிழைத்த/மயிலாடுதுறையில் பிறந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி. அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.சொல்வனம், கணையாழி, உயிரோசை, காவ்யா, வாசகசாலை, ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் Inexhaustible, Those Faulty Journeys, MeT App, Fancy Nuptials என்ற படைப்புகளும் தமிழில்ஒப்பனைகள் கலைவதற்கே ,உங்கள் எண் என்ன? அட்சயபாத்திரா, இரண்டு விரல்கள், வரதட்சணா, ஏஞ்சலின் மற்றும் சிலர், வதுவை - நாவல், வாவ் சிக்னல், 22028, மரபணுக்கள், தீசஸின் கப்பல்என்ற படைப்புகளும் வெளிவந்துள்ளன. ராம் அவர்களின் வாவ் சிக்னல் அறிபுனைச் சிறுகதைத் தொகுதிக்கு மாநில அரசின் விருது கிடைத்திருக்கிறது.ஜீரோ டிகிரி பப்ளிஷிங் 2022 இலக்கிய விருது, JCE - Distinguished Alumni Award - பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி மோதியதில் பரிதாபகரமாக ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கின்ஸ் தோற்று விட்டது.எனினும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.இந்த நிலையில் கிரிக்கெட் ஆலோசகர் ராஜேஷ் கர்காவுடன் உரையாடல்.யார் கப் ஜெயிப்பார்கள்?எவர் அதிக ஆட்டங்கள் எடுத்து, நிறைய ரன் எடுத்ததற்காக ஆரஞ்சுத் தொப்பியை கைப்பற்றுவார்?எந்த வீரர் நிறைய பேரை ஆட்டமிழக்கச் செய்து அதிக விக்கெட்களைக் கைப்பற்றி ஊதாத் தொப்பியை வெல்வார்?மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து மூன்று ஆட்டங்களை வென்று ஹர்திக் பாண்டியாவிடம் கோப்பையைக் கொடுக்குமா?எந்த அணி எந்த மைதானத்துக்கு ஏற்றது?முந்தைய போட்டி வரலாறு, குறிப்பாக இந்த மைதானங்களில் நடந்த பிளே-ஆஃப் போட்டிகள்போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் அதிக தாக்கம் செலுத்தக் கூடிய வீரர்கள் யார்?பிளேஆஃப் (நாக்-அவுட்) போட்டியை வெல்லும் திறன் உள்ள வீரர்கள் உள்ள அணிகள் யாவை?லீக் மற்றும் பிளேஆஃப் போட்டிகளில் ஆடும் அணிகளின் மனநிலை வித்தியாசம் மற்றும் யாருக்கு அதிக முன்னிலை?ஏற்கனவே பிளேஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் எவ்வளவு முக்கியம்?முந்தைய பிளேஆஃப் போட்டிகளில் கேப்டன்களின் சிறப்பான முடிவுகள் என்ன?ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் ஆர்.சி.பி. போன்ற அணிகளுக்கு அது வரமா? சாபமா?ஒரு IPL-ஐ வெல்ல என்ன தேவை?
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'உயிரில் கலந்து'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சுதா ஶ்ரீநிவாசன்உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் சுதா ஶ்ரீநிவாசன் காப்பீட்டுத்துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டவர். சமீபத்தில்தான் எழுதத் தொடங்கினார். சிறுவயது முதலே படிக்கும் பழக்கம் உண்டு. அம்புலிமாமா முதலாக கல்கி, சுஜாதா, வாஸந்தி, பாலகுமாரன் என நீளும் வரிசையில் தீவிர இலக்கிய வாசிப்பை வந்தடைந்தார். ‘எழுதுக’ என்னும் ஜெயமோகனின் சொல்லை கட்டளையாக எடுத்துக்கொண்டவர்களில் தானும் ஒருத்தி என்கிறார்.“உயிரில் கலந்து” என்ற சிறுகதை, குடும்பத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் பற்றிப் பேசுகிறது. திருமணம் நன்கு அமையவில்லையெனில் அதன் தாக்கம் எப்படி உணர்வுபூர்வமாக அவர்களைக் காயப்படுத்துகிறது என எடுத்துச் சொல்கிறீர்கள். ஆன்மீகத்தில் நாட்டமும் , உதவி செய்யும் மனப்பான்மையும் உடையவளாயினும் இந்த மனவேதனைகள் இவற்றையெல்லாம் மீறி அவள் உயிரை அவளே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு அவளைக் கொண்டு போகிறது. பெண்கள் மனதுதான் எவ்வளவு மென்மையானது. சில சமயம் கோழையாகவும் செயல்படுகிறார்களா?உங்கள் கதையின் மொழி நல்ல நேர்த்திஇது ஒரு பெண்ணின் தனிப்பட்ட கதையாக இருந்தாலும், அது பல பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. பிரேமா உயிரை மாய்த்துக்கொள்கிறாள். உயிர் போகுமுன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போகும்போது “ இதுதான் அவனுக்கான தண்டனை என்பாள். ஆனால் நிஜத்தில் தண்டனை ஏது? அவள் இறந்த பின் அவன் மீண்டும் மாப்ப்பிளை ஆகி தகப்பன் ஆகிறான். ஆனால் 25 வருடங்களாக அவள் நெருங்கிய உறவினருக்கு முக்கியமாக தங்கை ப்ரியாவிற்கு மனவேதனை ஆரம்பமாகிறது. காரணம் தேடுகிறாள். தற்கொலை செய்துகொண்டவர்கள் சென்றுவிடுகிறார்கள் அதன் பின் அந்த குடும்பம் மனதளவில் படும்பாட்டை நீங்கள் வெளிபடுத்தியுள்ளது அருமை. தங்கை ப்ரியாவிற்கு அவள் கணவன் மாதவன் மிகுந்த ஆறுதலாக இருப்பதில் தங்கை ப்ரியா கொடுத்து வைத்தவள். மொத்தத்தில், “உயிரில் கலந்து” என்பது ஒரு உளவியல் ரீதியான, ஒரு உணர்வுபூர்வமான சிறுகதைகதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/உயிரில்-கலந்து/
Solvanam.com புனைவு வனம்: கங்காதரன் சுப்ரமணியம் எழுதிய ’அறுபது நொடிகள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு
சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம்
'அறுபது நொடிகள்'- சிறுகதை குறித்த உரையாடல்
எழுத்தாளர்: கங்காதரன் சுப்ரமணியம்
உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்
சென்னையில் படித்து வளர்ந்து, தற்போது பெங்களூரில் குடியுருக்கிறார். பட்டயக் கணக்காளர் (C.A) பட்டம் பெற்று, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம். ‘ஜீயெஸ்’ என்ற புனைபெயரில் முதலில் எழுத ஆரம்பித்து, தற்போது ‘கங்காதரன் சுப்ரமணியம்’ என்று இயற்பெயரில் எழுதி வருகிறார்.இணையப் பத்திரிகைகளில் இவர் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.
இந்த 'அறுபது நொடிகள்' கதையில், மும்பையில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்கத் தந்தை தனது குடும்பச் சுமைகள், பொருளாதார பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் வாழ்கிறார். ஒரு இரவில், அவர் தினசரி வேலைக்காக மும்பை லோக்கல் ரயிலில் பயணிக்கிறாரே, அப்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் பயங்கரமான 26/11 தீவிரவாத தாக்குதல் நடக்கிறது. அவர் ஒரே அறுபது நொடிகள் முன் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருப்பதால்தான் உயிர் தப்புகிறார். இந்தச் சிறிய நேர இடைவெளி அவனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
Thanks ChatGPT
சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/அறுபது-நொடிகள்/
கதையை வாசிக்க: https://solvanam.com/2022/10/23/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf/
விவாதிப்போர்:
ப்ரமோதினி
நிர்மல்
சாரதி
உரையாடுபவர்: கதை எழுதிய ஜெகதீஷ் குமார்
"பேராசிரியரின் கிளி" கதையை மேற்கத்திய நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது, குறிப்பாக ஜூலியன்Barnes' "The Sense of an Ending" அல்லது காஜுவோ இஷிகுரோவின் "Never Let Me Go" போன்ற கதைகளுடன் ஒப்பிடலாம். இக்கதைகளும் கடந்த கால நினைவுகள் மற்றும் அவற்றின் தாக்கங்களைப் பற்றியவை. அதேபோல், "பேராசிரியரின் கிளி" கதையும், கடந்த கால நினைவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் நுணுக்கமாக விவரிக்கிறது.
இது நினைவுகள், காலப்போக்கின் தாக்கம், மற்றும் மனித உறவுகளின் மாறுபாடுகளை நுணுக்கமாக விவரிக்கிறது. கதையின் மொழி, அமைப்பு, மற்றும் கருப்பொருள் அனைத்தும், இதனை ஒரு சிறந்த இலக்கிய படைப்பாக மாற்றுகின்றன. மேற்கத்திய நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது, இது ஒரு முக்கியமான தமிழ் சிறுகதையாகும்.
கட்டுரையை வாசிக்க: https://solvanam.com/2025/04/13/இறவாமை-பகுதி-இரண்டு/
உரையாடியவர்: சிவா துரை
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தத்துவம் என்ன?
ஜெயகாந்தன் சபையில் என்ன பேசுவார்கள்?
எழுத்தாளர்கள் விவாதிக்கும் விஷயங்கள் என்ன?
சுஜாதா இலக்கியவாதியா?
கோயம்புத்தூர் தியாகு புத்தக நிலையமும் சிறுவாணி வாசகர் வட்டமும் எவ்வாறு துடிப்புடன் இயங்குகின்றன?
சிற்றிலக்கியமும் சிற்றிதழ் அரசியலும் - நல்ல சொற்பொழிவாளர்கள் நல்ல புனைவாளர்களா?
விமர்சன இலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும்?
எதற்காக புகழ்பெற்றோரை சந்திக்கிறோம்?
ஏன் மற்றவர்களின் துணையை நாடுகிறோம்?
எதற்காகப் படிக்கிறோம்?
சாட்ஜிபிடி அவதாரங்கள் நமக்கான வழிகாட்டல் துணை ஆகுமா?
இது போன்ற பல கேள்விகளுக்கு வ. சீனிவாசன் விளக்கம் தருகிறார். விவாதிக்கிறார்.
எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன் உடைய முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.
இவரது நூல்கள் :- 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்டுரை நூல்கள், ' கனவு மழை ' என்கிற சிறுகதைத் தொகுப்பு, வாழ்க்கை பற்றிய அறிவு' ஜே. கிருஷ்ணமூர்த்தி யின் On education நூலின் மொழி பெயர்ப்பு.
இவர் 'சொல்வனம்' இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாதம் ஒரு நூல் வழங்கும் 'சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர்.