
சஹாபாக்கள் அரபு மொழியின் வீழ்ச்சியை ஆரம்ப காலத்திலேயே கவனித்தனர். அலி (ரலி) அவர்கள் அவருடைய ஆட்சிக்காலத்தில் ஒருமுறை அரபு குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் பேசுவதையும் பார்த்து, இவர்கள் பேசுவது அரபுகளுடைய மொழி இல்லை என்று கூறினார்.
நபியவர்கள் காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் மூன்று பாதுகாப்பு இயக்கங்கள் தோன்றுகிறது
1. குர்ஆனைப் பாதுகாக்கவும்
2. ஹதீஸைப் பாதுகாக்கவும்
3. அரபு மொழியைப் பாதுகாக்கவும்
அந்த காலகட்டத்தில் நல்ல தூயமையான அரபியைப் பெற விரும்பினால், பாலைவனத்திற்கு சென்று அங்கிருக்கக்கூடிய நாடோடி மற்றும் கிராமத்து அரேபியர்களிடத்தில் பேச வேண்டும். இமாம் ஷாபி, அஸ்மாயீ போன்றவர்கள் அந்த மொழியை அதன் தூய்மையில் வடிவத்தில் பாதுகாக்க நிறைய இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டனர்.