
பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தனியான புலம்பல். திருப்புமுனைகள் நிறைந்தவைதானே வாழ்க்கை. அறிந்தோ அறியாமலோ, கேட்டோ கேட்காமலோ திருப்பு முனைகள் வந்தே தீரும் என்றே தோன்றுகிறது. அந்த முனைகள் என்னை கிழித்துவிடாமல் இருக்க நான் மேற்கொள்ளும் முயற்சிகளில் கடும் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய இந்த Podcast அப்படியான ஒரு இடம் தான். நான் என்மேல் அதீத கவனம் செலுத்தும் ஒரு இடம். இது என் தோட்டம். இங்கே மீண்டும் ஒரு செடியை நட்டுவைக்கவே இந்த புலம்பல்.