
திருட்டுத்தனமாய் வளர்த்த முடி; PT SIR, திட்டியும் திமிர் எடுத்து வளர்த்த முடி.
தலைவரை பார்த்து வளர்த்த முடி; தலைவி பார்ப்பதற்காகவே வளர்த்த முடி.
வேண்டியவர் இறப்பின் பொருட்டோ, வேண்டுதல் கணக்கின் பொருட்டோ மழிப்பதற்கு எப்போதும் கைவசமாய் இருந்த முடி - இன்று, கையோடு கொத்து கொத்தாய் கொட்டுவதும் அதே முடி - ஹ்ம், எந்த மயிரானால் என்ன, விடை பெற விரும்பினால் வருத்தமின்றி வழியனுப்பி வைப்பது தானே சரி, விடு; இது மயிர் உதிர் காலம், அவ்வளவு தான்.