
சராசரியாக நாம் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு மேலே ஏதேனும் தகவல்களை உள்ளீடாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் நமது கட்டுப்பாட்டில் இல்லை என ஒரு குற்ற உணர்வு இருந்தும் அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என நினைப்பதற்குள் அடுத்த தகவலைத் தேடிச் சென்று விடுகிறோம். தவறு நம்மிடம் மட்டுமே இல்லை. ஏனென்றால், டி.வி., சமூக வலைதளங்கள் போன்றவை நம்மை அடிமை ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. எனவே அது அதன் வேலையை சிறப்பாக செய்கிறது. அதற்காக அதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அவைகள் உங்களுக்கு என்ன வேண்டும் என முடிவு செய்ய விடாமல், நீங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு என்னென்ன செய்யலாம் என வீடியோவில் காணலாம். ஈசியான வழிகள் தான்…!
வலையொலியை வேறு தளங்களில் கேட்க: https://www.mariappankumar.com/podcast
டிசைன் சிந்தனையை எளிய உதாரணங்கள் மூலம் வளர்க்க நான் எழுதி வரும் தொடரை வாசிக்க: https://www.vasagasalai.com/tag/யாதும்-டிசைன்