
கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.